ராமு பணம் ஏற்பாடு செய்துவிட்டாயா? இங்கு இருப்பவர்கள் என்னை நிமிடத்துக்கு ஒரு முறை பணம் கட்டிய ரசீதை கேட்கிறார்கள், அப்பாவை பார்ப்பதர்க்கே எனக்கு பயமா இருக்கிறது. கொஞ்சம் சீக்கிரம் வாபா.
அம்மா, பணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன் பயப்படாதே, இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் மருத்துவமணைக்கு வந்து விடுவேன். கவனமாக அப்பாவை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு.
“அம்மா சார்”, இந்த ஒரு லட்சத்தை எடுத்துகொண்டு சீக்கிரம் வா என்று சொல்கிறாங்க. நன்றி சார் என்று தன் அலுவலத்தில் இருந்து வாங்கிய முன் பணத்தை எடுத்துகொண்டு வீட்டுக்கு சென்று தன் மனைவி மற்றும் 12 வயது மகனுடன் மருத்துவமனைக்கு தன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டான்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில், மனைவியிடம் “எனக்கு பயமாக இருக்கிறது பூஜா”.
“ஏங்க மாமாதான் நல்லபடியாகதான் இருக்கிறார், நீங்க ஒன்றும் பயப்படாதீங்க, கடவுள் இருக்கிறார்” என்ற சொன்னாள்.
“ஏன் இவ்வளவு அவசரமாக பணத்தை கேட்கிறார்கள் இந்த பத்து நாள் இப்படி நடக்கவேயில்லையே”. என்று கண் கலங்கியவனாக மருத்துவமனைக்கு வந்ததடைந்து பணத்தை கட்டிவிட்டு ஐ.சி.யு. இருக்கும் இடத்துக்கு வந்தான்.
ஐ.சி.யுவில் இருந்து அப்பாவை பார்த்து இன்றும் அழுதான், ஆனால் மிக அதிகமாக.
அவனுடைய அப்பாவின் உடல்நிலை என்று மிகவும் மோசம்மான நிலையில் இருந்தது. அவருக்கு உடல் மெலிந்து மூச்சு விட மிகவும் சிரமம்பட்டு கொண்டுருந்தார். அவனுக்கு புரிந்தது இன்று தான் தன் அப்பாவின் கடைசி நாளாக இருக்குமோ என்று.
….
….
ஒவ்வொரு மாதமும் அவனுக்கு மிக சிரமமான மாதமாக இருந்தது. குறிப்பாக அவனுடை அப்பாவின் மறைவுக்கு பிறகு. அப்பாவுக்காக வாங்கிய கடன் மட்டும் 5 லட்சம் ரூபாயை அவனுடைய மாத சம்பளத்தில் இருந்து தான் கொடுக்கவேண்டும்.
தன்னுடைய மாத சம்பளத்தை அம்மாவின் மருத்துவ செலவு, குடும்பத்தின் சாப்பாடு செலவு, அவனுடைய தனிபட்ட செலவு மற்றும் அப்பாவுக்காக வாங்கிய கடனுகான வட்டி என்று பிரித்துகொண்டு இருந்தான் வழக்கமான கடுகடுப்புடன்.
இவைகளை மாதம் மாதம் பார்த்துகொண்டு இருக்கும் அவனுடைய மகனிடம் இருந்து ஒரு குரல் “அப்பா” என்று
“அப்பா, பெரியாவனானவுடன் நானும் உங்களை போன்று கஷ்டம்படுவேனா?” என்று கிழே இருந்த சிறு புகை துண்டை எடுத்து குப்பையில் போட்டவானாக.
அனைவரும் ஒரு நிமிடம் அமைதியானார்கள்.
அவனுடைய பாட்டி. கண்ணீரை துடைத்துகொண்டு சமயல் அறைக்கு வேகமாக நடந்தாள். தன் பேரனுக்கு வாயில் சக்கரை போட.
ஆம். குடி மற்றும் புகை உடலுக்கு மட்டும் கேடு அல்ல, தன்னுடை மகனுக்கும்/மகளுக்கும் தான் கேடு.
தாஜூதீன்
Good article for this generation!!!
LikeLike