இந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது.
கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போழுதே கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது, அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தை தாண்டிப் பாய்ந்து செல்கிறது. இன்னும் நான்கு நாட்கள் மழை நீடித்தால் கேரளாவில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் மோசம் அடையும்.
மழை எப்போழுது நிற்கும் என்ற கவலைதான் அனைவருக்கும்.
உதவி
மற்ற மாநில அரசுகள் கேரள மாநிலத்துக்கு நிறைய உதவிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள், அது மட்டும் போதாது , தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் கேரள மாநிலத்துக்கு நிறைய உதவிகளைச் செய்யவேண்டும். இது நாம் அவர்களுக்கு செய்யும் கைமாறு என்று தி தமிழ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.