தண்ணீரை காப்போம்! நம் முன்னோர்கள் வழியை பின்பற்றுவோம்!
கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் கன மழையின் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முக்கொம்பு அணையில் இருந்து அதிக தண்ணீரை கொள்ளிட ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அதிக அளவு தண்ணீர் கடலில் கலக்கிறது.
கடந்த பல வருடங்களாகத் தண்ணீருக்காக அடுத்தவர்களிடம் அரசியல் செய்துகொண்டு இருந்தோமே தவிர, எப்படி தண்ணீரை சேமித்து வைப்பது என்று யோசிக்காமல், இப்படி வருகிற தண்ணீரை வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம்.
முன்னோர்களின் தண்ணீர் மேலாண்மை
- மலையில் இருந்து ஆறு
- ஆறுகளில் இருந்து ஓடை
- ஓடையில் இருந்து ஏரி
- ஏரியில் இருந்து குளம் / குட்டை
- குளத்தைச் சுற்றி கிராமம்
- கிராமத்தைச் சுற்றி வயல் நிலங்கள்
இப்படி இருந்த நம் முன்னோர்களின் தண்ணீர் மேலாண்மை முறையை, நாம் பராமரிக்காமல் விட்டதன் பலனை இப்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.
குளங்களும் ஏரிகளும் வளர்ச்சி என்ற பெயரில் பேருந்து நிலையங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறியிருக்கிறது. அதில் இருந்து தப்பித்தவை, சாக்கடை தண்ணீர் மற்றும் கழிவுகளை சேமித்து வைக்கும் இடமாக மாறியிருக்கிறது.
இதனை சரிசெய்யவேண்டும் என்று நமக்கு ஒவ்வொரு வருடமும் மழை (மழை அதிகமாகவும் அல்லது மழையே இல்லாமலும்) உணர்த்திவிட்டு தான் செல்கிறது. ஆனாலும் நாம் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. இப்படியே நாம் இருந்தால், ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகிக்கொண்டு இருக்கிறது என்று புலம்பிக்கொண்டுதான் இருக்கவேண்டும் (இப்பொழுது நான் எழுதிக்கொண்டு இருப்பதைபோன்று).
இதற்கு ஒரு தீர்வு என்ன வென்றால், நாம் நம் முன்னோர்களின் வழியைப் பின்பற்றவேண்டும்.
கிராமத்தில் உள்ள பெரியவர்கள் ஒன்றுபட்டு, முதலில் ஓடைகளை அடையாளம் கண்டு, அரசு மற்றும் இளைஞர்கள் மூலம் ஓடைகளைச் சரிசெய்தால். நம் கிராமத்தில் இருக்கும் ஏரி மற்றும் குளங்களுக்கு ஆறுகளில் இருந்து ஓடை வழியாகத் தண்ணீரை கொண்டுவரலாம்.

உங்கள் கிரமத்தில் இருக்கும் குளம், ஏரி மற்றும் ஓடை (இருந்தால்) அதனுடைய புகைப்படத்தை எங்களுக்கு thetamilan81@gmail.com மூலம் பகிரவும்.
தகுந்த நேரத்தில் சிறந்த பதிவு
நீரின்றி அமையாது உலகு
என்பதை நினைவூட்டியமைக்கு நன்றி…
ஒன்றுபடுவோம் தலைமுறை செழித்தோங்க…
LikeLiked by 1 person
Superb
LikeLiked by 1 person