மறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே.
இதில் ஒரு லட்சம் பேர் என்பது உண்மையில் ஒரு சவலான காரியம், இதனைச் சாதித்து காட்டுவாரா அழகிரி என்பது தான் இப்பொழுது அனைவரின் எதிர்பார்ப்புகள். இந்த எதிர்பார்ப்புகளுக்கு காரணம் அவர் இதுவரை ஒரு இலக்கை வைத்துச் செய்த அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறார். உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல்.
எதற்க்கும் அஞ்சாதவர் என்று பெயர் எடுத்த மு.க. அழகிரி மற்றும் அழகிரி மகன் துரை தயாநிதி அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக திமுகவிடம் எங்களை அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளுங்கள் நாங்கள் ஸ்டாலின் அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இதில் இருந்து ஒன்று நமக்குத் தெள்ள தெளிவாகத் தெரிகிறது. மு.க. அழகிரியின் இப்பொழு இருக்கும் ஒரே நோக்கம் திமுகவில் உறுப்பினர்களாகச் சேருவது தான். அதன் பிறகு அவரின் ஆட்டத்தை ஆடுவது.
செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து புதிர்களுக்கும் விடைகள் கிடைக்கும் என்றே தோன்றுகிறது.
50 வருடம் அரசியலில் இருக்கும் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இது எப்படி தெரியாமல் இருக்கும்.
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது
இவரை திமுக வில் சேர்த்தால் ஆபத்து, தவிர ஒரு புரோஜினம் கூட இல்லை. பத்திரிகை அலுவலகம் எரித்த சம்பவம் ஓன்ரே போதும் இவர் செய்த பாவத்துக்கு.
LikeLike