நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு

audience-band-bright-1047442

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள். சிவக்குமார் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவார்.

தன்னுடைய பேச்சாற்றலினால், இந்து சமய புராணங்களை அழகிய தமிழில் மிகவும் சுவாரசியமாக  அதுவும் சில மணி நேரங்களில் அனைத்துச் சம்பவங்களையும் தெளிவாக எடுத்துரைப்பார். 

அதுமட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரபலங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை மிகச் சுருக்கமாகவும், சில சுவாரசிய சம்பவங்களையும் நமக்கு எடுத்துரைப்பார். சில சமயங்களில் அவரின் பேச்சு, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கும். (குறிப்பாக பெரும்பாலான வாழ்க்கை குறிப்பு பேச்சுகள், அந்தப் பிரபலங்களின் இறுதி நாட்களாக இருக்கும்)

தான் மேற்கொள்ளும் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியினால் தான் இன்றும் இளமையுடனும் ஞாபகசக்தியுடனும் இருக்கிறேன் என்று அவருடைய பேட்டியில் சொல்லிக் கேட்டு இருக்கிறோம்.

இதுவரை சிவக்குமார் அவர்களைப் பற்றிய எந்தவித சர்ச்சைகளும் வந்ததில்லை. ஆனால், கடந்த வாரம் அதிகமான விமர்சனங்களுக்கு ஆளானார்.

கடை திறப்பு விழாவில், அவருடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டதன் எதிர்விளைவாக, அவரின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அவரின் செயல் சரியா தவறா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இறுதியாக, சிவக்குமார் அவர்கள் மன்னிப்புடன் மாற்று செல்போனை வாங்கி கொடுத்து. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவ்வப்போழுது நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.

கடந்த இரண்டு தலைமுறையாக நடிகர் நடிகைகளை மேன்மக்களுக்கு மேலாக நினைத்து போற்றியதன் விளைவுகளை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டுருக்கிறோம்.

நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு

ஒரு நடிகர் நடிகையைப் பார்த்தவுடன் தன்னிலையை மறந்து அவர்களை எப்படியாவது அருகில் பார்த்துவிடவேண்டும் என்றும். அவர்களிடம் கையெழுத்து வாங்கவேண்டும் என்றும் அவர்களை சூழ்ந்துகொள்ளும் ரசிகன் கூட்டம் அதிகம். அதுவும், இப்பொழுது கையெழுத்து வாங்குவதற்கு மாற்றாக அவர்களிடம் ஒரு செல்பி எப்படியாவது எடுத்து விட வேண்டும், அவர்களின் அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் என்கின்ற மனநிலையில்தான் அனைத்து ரசிகர்களும் இருக்கிறார்கள். 

நடிகர் நடிகைகளுக்கு, தான் வளரும் வரை தன்னை சுற்றி எவ்வளவு பேர் சூழ்ந்தாலும் அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதுவே அவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டோம் என்ற நினைப்பு வந்த உடனே இப்படியான நிகழ்வுகள் அவர்களுக்கு கோபம் மற்றும் எரிச்சலை கொடுக்கின்றது. 

நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இடையில் இருக்கும் உறவு வணிகம் சம்பந்தமான உறவு என்பதை ஒவ்வொரு ரசிகனும் உணரும் நாள் வரும் வரை இந்த நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.

 

 

3 thoughts on “நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு

 1. “அதுவே அவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டோம் என்ற நினைப்பு வந்த உடனே இப்படியான நிகழ்வுகள் அவர்களுக்கு கோபம் மற்றும் எரிச்சலை கொடுக்கின்றது”

  அருமையான வரிகள்…

  Like

 2. “நடிகர் நடிகைகளுக்கு, தான் வளரும் வரை தன்னை சுற்றி எவ்வளவு பேர் சூழ்ந்தாலும் அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதுவே அவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டோம் என்ற நினைப்பு வந்த உடனே இப்படியான நிகழ்வுகள் அவர்களுக்கு கோபம் மற்றும் எரிச்சலை கொடுக்கின்றது. ”

  With great power comes great responsibility.

  This is very natural, while growing you don’t see what is right or wrong w.r.t others, instead your focus would be on only on your growth. Once you have reached to a point after all those hurdle, you will need to be careful with whom to take photo or dine. Now a days a single photo can destroy anyone hard and sincere work of his lifetime.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.