
கடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான எண்ணங்களில் இருந்து அடியோடு மாற்றிய நாள் டிசம்பர் 26, 2004.
ஆம், 26 டிசம்பர் 2004ஆம் தேதி ஆசியக் கண்டத்தின் மிகவும் சோகமான நாள் என்றே சொல்ல வேண்டும். அன்றுதான் ஆழிப்பேரலை என்கின்ற சுனாமி இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா கடலோர மக்களை கொன்று குவித்தது . இந்த ஆழிப்பேரலை சுமார் 230,000 மக்களின் உயிர்களை பறித்தது.
ஆழிப்பேரலை (சுனாமி) என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த நம் தலைமுறைக்கு அதன் கோரத்தாண்டவத்தை தெளிவாக காட்டி விட்டு சென்றது. பல லட்சம் உயிர்களை எடுத்துக்கொண்டும், அதற்கு நிகரான அவர்களின் உறவுகள், இருக்கும் இடம் மற்றும் உடைமைகள் இன்றி தவிக்க விட்டது.
இந்த பேரலையின் பாதிப்பு அடைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் கடற்கரையை ஒரு மிரட்சியுடனே பார்க்கவைக்கின்றது . அது மட்டுமில்லாமல், பல மீனவ கிராமங்கள் கடற்கரையிலிருந்து தங்கள் இருப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்துக்கொண்டார்கள்.
நிலநடுக்கம், புயல், ஆழிப்பேரலை போன்ற இயற்கை பேரழிவுகளை நம்மால் தடுக்க முடியாது என்று பல சமயங்களில் நமக்கு உணர்த்திவிட்டு சென்று இருக்கிறது. ஆகையினால் இயற்க்கையோடு ஒன்றி வாழ்வதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை.
“இயற்க்கையோடு ஒன்றி வாழ்வதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை” சரியாக சொன்னீர்கள்..
LikeLike
Yes sir. U r right.
Leave plastic culture !!
Live with nature !!
It’ll help our future !!
By
Nature Boy
VJ Arun
LikeLike
Nice article and good awareness to the world. Great Thaj.
LikeLike
Nice article and good awareness to the people. Great Thaj, keep up the good work.
LikeLike
Nice article and good awareness to the people. Great Thaj, keep up the good work.
LikeLiked by 1 person