பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்

இந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை போன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அடங்கும்.

பூமி நிலப்பரப்பில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவைவிட கடலுக்கு அடியில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு மிகவும் அதிகம் என்கிறது ஆய்வு. பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக இருப்பதனால் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக் நம் வாழ்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் இல்லாமல் ஒருநாள் கடக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. பிளாஸ்டிக் பயன்பாடு அந்த அளவுக்கு நம்மை சூழ்ந்து உள்ளது. காலையில் அன்றாடம் பயன்படுத்தும் பால் பாக்கெட்டில் தொடங்கி அனைத்திலும் பிளாஸ்டிக்கை தான் பயன்படுத்துகிறோம்.

பிளாஸ்டிக்கின் தீமைகள்

 • கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.
 • பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் தன்மையைப் பாதிக்கிறது.
 • நெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்துக் கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
 • பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல ஊறுவிளைகிறது.
 • கடல், நீர்நிலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற இடங்களில்
  நெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.
 • பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.
 • பிளாஸ்டிக்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாக இருப்பினும் பிளாஸ்டிக்கானது வேதிவினை புரிந்து அவற்றை நாம் பயன்படுத்தும் போது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்த்து பல நோய்களுக்கு காரணமாவும், கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது

பிளாஸ்டிக்கின் தீமைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வது இப்பொழுது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அரசாங்கத்தைவிட மக்களாகிய நம்மிடம் இருந்துதான் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும். நாம் எடுக்கும் ஒரு சில முயற்சியினால் பாதி அளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும். அதில் சில

 • கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போழுது, துணியினாலான பையை எடுத்துச் செல்வது
 • திருமணங்களில் வாழையிலையை பயன்படுத்துவது
 • பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது
 • பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது

இப்படியான சிறு சிறு மாற்றங்களினால் பிளாஸ்டிக்கின் அதீத பயன்பாட்டை கட்டுபடுத்தலாம்.

பிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல உறுதி கொள்வோம்.

3 thoughts on “பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்

 1. Now plastic has become integral part of our system. It is very difficult to come out of it. People tend to use it illegally. These kind of awareness need to be required to educate the people….

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.