நம்முடைய அடுத்த தலைமுறை தண்ணீர் இன்றி தவிக்கும் என்று நினைத்த நமக்கு, நம் தலைமுறையிலேயே தண்ணீர் இன்றி தவிக்கப்போகிறோம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். தண்ணீர்! அனைவருக்கும் அதன் அருமையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையை போன்ற பெருநகரங்களில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. மக்கள் தண்ணீர் வண்டிக்காக குடங்களுடன் தெருக்களில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கோடை காலங்களில் பல கிராமங்கள் தண்ணீர் இன்றி தவிர்க்கும் போது அதை செய்தியாக கடந்துபோன நாம், இப்பொழுது நகரங்களில் தண்ணீர் இல்லை என்றவுடன் தண்ணீர் சேமிப்பு பற்றி அனைவருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் ஏரி மற்றும் குளங்களை அழித்து கட்டப்பட்ட அடுக்கு மாடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு.
வாழ்வியல் மாற்றம்
இன்று, தண்ணீர் இன்றி நாம் தவிப்பதற்கு (தவிக்கப்போவதற்கு) பல காரணங்கள் இருக்கின்றது அதில் மிக முக்கிய காரணம், வாழ்வியல் முறையில் நாம் ஏற்படுத்திய முக்கிய இரண்டு மாற்றங்கள் (தவறுகள்).
ஒன்று, நம் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் விடுவதற்கு பதில் வீட்டின் முன்புறம் சாக்கடையாக வெளியேற்றிக் கொண்டிருப்பது.

இரண்டு, வீட்டில் உருவாகும் திடக்கழிவுகளை, வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் சிறிய பள்ளம் தோண்டி அதில் போடுவதற்கு பதில் வீட்டின் முன்புறத்தில் குப்பையாக (அதுவும் பிளாஸ்டிக் பையில்) போட்டுக் கொண்டிருப்பது.

நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் இருந்து தடுமாறி, நாகரிகம் என்ற பெயரில் நாம் மாற்றிய இந்த மாற்றங்களினால் ஏற்பட்ட விளைவுகளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
விளைவுகள்
வீட்டிலிருந்து வெளியேறும் சாக்கடை நீரை எப்படி கையாளுவது என்று தெரியாமல், கடல் சார்ந்த பகுதியாக இருந்தால் கடலில் கலப்பது, ஆறுகள் ஓடும் பகுதியாக இருந்தால் ஆற்றில் கலப்பது, இவை இரண்டும் இல்லாத பகுதியாக இருந்தால், நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஏரி மற்றும் குளங்களில் சாக்கடை நீரை விட்டு விடுவது.
இதனைப் போன்று, மலை போன்று உருவாகும் குப்பைகளை எங்கு சேமிப்பது என்று தெரியாமல், ஊருக்கு வெளியே இருக்கும் ஏரி மற்றும் குளங்களில் உள்ள கறைகளில் குப்பைகளை கொட்ட தொடங்கி இன்று பல ஏரி, குளங்களை குப்பைகளினால் மூடிவிட்டோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இப்படியாக கடந்த 40+ வருடங்களாக வீட்டின் சாக்கடை மற்றும் குப்பைகளை தெருவுக்கு கொண்டு வந்து அனைத்து நீர்நிலைகளை அழித்து விட்டு, இன்று தண்ணீர் இல்லை என்று குடங்களுடன் அதே தெருவில் நின்று கொண்டிருக்கிறோம்.
Absolutely correct and people should take social responsiblities to save water, need to plant more trees.
Instead expecting water from ground, create the environment to get the water from sky.
LikeLike
Enga veetu kita corporation water suthama taste poituchi…. ithu epathula irunthana enga veetu kita mineral water tank epa vachangalo apathula irunthu.. 2017 varaikum Thanni nallatha irunthuchii… 2 years romba mosama iruku kita thatta yallarum maaritanga mineral water ku but yanga Amma engala mara vidala ithu yathanala nadakuthunu kandupidika try panna but mudilaa..
Ana sweet iruntha corporation water IPA salt maarituchii… kasappa iruntha Mineral water IPA sweet marituchii next pondi laium athey nelama than…
LikeLike
Very sad to hear about this water scarcity… we have to think how to save rain water too. Everyone should plant trees to save our future generations…
LikeLike