பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி – நிர்வாகம் மற்றும் நாம் செய்யவேண்டிய கடமைகள்

தொழுகைக்கு நாளைமுதல் (08-06-2020) பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகையை (இமாம் தொழுகையை) நடத்தலாம் என்று அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பள்ளியில் தொழுகைக்கு போகும் அனைவரும் கீழே உள்ளவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிர்வாகம் செய்ய வேண்டியவை

  • பள்ளிவாசலை தினமும் கிருமி நாசினியை கொண்டு துடைத்து மற்றும் சுத்தமாக வைத்துக்கொள்வது
  • ஒவ்வொரு தொழுகைக்கு முன் அதிகம் பயன்படுத்தும் கதவின் கைப்பிடி, தண்ணீர் குழாய் போன்றவற்றை கிருமி நாசினியை கொண்டு துடைப்பது
  • பள்ளிவாசலில் பயன்படுத்தும் பாய்களையும் மற்றும் தொப்பிகளையும் பயன்படுத்தாமால் இருப்பது
  • பள்ளிவாசலில் உள்ள ஹவுஸில் தண்ணீரை சேமிக்காமல் அனைத்தையும் சுத்தபடுத்தி வைப்பது
  • பள்ளிவாசலில் குளிர்சாதனம் பயன்படுத்துவதை தவிர்பது

தொழுகைக்கு வருகைத் தருமவர்களுக்கு

கடைப்பிடிக்கவேண்டியது

  • விட்டிலேயே தொழுகைக்கான உளூ செய்துக்கொள்வது
  • முகம் மற்றும் கை கவசத்துடன் செல்வது
  • தொழுகைக்கான விரிப்பை (முஸல்லாவை) வீட்டிலிருந்து எடுத்துக்கொள்வது
  • முன் சுன்னத் தொழுகையை வீட்டிலேயே தொழுதுக்கொள்வது
  • பரல் தொழுகையை இமாமுடன் சமூக இடைவெளியுடன் தொழுவது
  • தொழுகையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் கிருமி நாசிக்கை கொண்டு கையை கழுவது

தவிர்க்கவேண்டியது

  • பள்ளிவாசலில் உளூ செய்வதை முடிந்த வரை தவிர்க்கவேண்டும்
  • பள்ளிவாசலில் உள்ள கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்
  • பள்ளிவாசலில் இருக்கும் தொப்பியை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்
  • பள்ளிவாசலில் இருக்கும் மின் ஒளி மற்றும் விசிறி சுவிட்சுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்
  • ஒருவருக்கு ஒருவர் கையை கொடுப்பது மற்றும் கட்டித்தழுவதை தவிர்க்கவேண்டும்
  • பள்ளிவாசலில் கூட்டமாக பேசுவதை தவிர்க்கவேண்டும்
  • முடிந்தவரை பள்ளிவாசலில் உள்ள எந்தப் பொருளையும் தொடாமல் இருப்பது மிக்க நன்று

தாஜூதீன்

2 thoughts on “பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி – நிர்வாகம் மற்றும் நாம் செய்யவேண்டிய கடமைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.