டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

21/03/2021

புதுச்சேரி அரசியலில் கட்சியைவிட வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. கட்சி அவர்களி்ன் வெற்றியை மேலும் உறுதி செய்யும் அவ்வளவுதான் கட்சியின் வேலை. இதுதான் தமிழ்நாட்டு அரசியலுக்கும், புதுச்சேரி அரசியலுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்.

குறிப்பிட்ட தொகுதி வேண்டும் என்பதற்காக, அந்த தொகுதியில் இருக்கும் எம்.எல்.ஏகள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்வார்கள், இருந்தும் அந்த வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏவாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. டி.பி.ஆர். செல்வம். இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற ஒருசில எம்.எல்.ஏக்களில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்.

மண்ணாடிப்பட்டு தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ என்று அனைவராலும் போற்றும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தார். கடந்த பத்து வருடங்களாக தன் எம்.எல்.ஏ பதவியை முழுமையாக மக்களுக்காக பயன்படுத்தினார் என்றே சொல்லவேண்டும். சாதி மற்றும மதம் பாராமல் அனைவரிடத்திலும் எளிமையாக பழகக்கூடியவர்.

நிச்சயமாக இந்த முறையும் என். ஆர். காங்கிராஸ் சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரும்பாலானோர் உறுதியாக நம்பினார்கள். ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு மண்ணாடிப்பட்டு தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டார் என். ஆர். காங்கிராஸின் தலைவரும், முன்னாள் முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள்.

நடைமுறையில், இரு கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தையில் தன்னுடைய கட்சியின் எம்.எல்.ஏக்களின் தொகுதியை மற்ற கட்சிக்கு விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் இங்கு நடந்தது விசித்திரமானது, புதுமையானது.

கடவுளுக்கும் மேலாக பார்க்கப்பட்ட தன்னுடைய தலைவன் தன்னை இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்த நிலையில், சுயேச்சையாக மண்ணாடிப்பாட்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருந்தும், அதனை தவிர்த்துவிட்டார்.

புதுச்சேரி அரசியலுக்கே இது புதுமையான ஒன்று அது மட்டுமின்றி திரு. ரங்கசாமி அவர்களுக்கே
டி.பி.ஆர் செல்வம் அவர்கள் ஒரு ஆச்சரியக் குறியாக இருந்திருப்பார்.

டி.பி.ஆர் செல்வம் அவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும். அடுத்த தேர்தலில் கண்டிப்பாக மண்ணாடிப்பட்டு தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்ககப்படுவார் என்று நாம் உறுதியாக நம்புவோம். இதுவொன்றும் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு புதியதல்ல, பழைய வரலாறும் இதனை உறுதிப்படுத்துகின்றது, அவர் மீண்டும் எம்.எல்.ஏவாக வருவார் என்று…

தாஜூதீன்

One thought on “டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

  1. TPR Selvam ஒ௫ தனி மனிதன் அவரது அடையாளம் NR ஐயா, அரசியல் கட்சியின் வெற்றி என்பது தற்போதைய நிலையில் கூட்டணியில் இணைந்து (Team Work) செயல்படுவது. அப்படி ஒரு கூட்டணி அமையாமல் போனதால் 2016 தேர்தலில் உதவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது MLA சம்பளம் 1,30,000/- + சலுகைகள் என்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து மக்கள் நல திட்டம் ஏதாவது உண்டா. பக்கத்து மாநிலத்தில் 234 தொகுதிகளைக் கொண்டுள்ளது மக்கள் நலத்திட்டங்களை குறைவில்லாமல் நடந்தது. சில நேரங்களில் சில தியாகம் செய்து வெற்றி கனி பறிப்பது அவசியம் என்று,,,,,,,,

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.