
அசுர நடிகனுக்கு இரண்டாவது தேசிய விருது
2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருது கிடைத்துள்ளது. அசுரன் திரைப்படத்திற்கும், அதில் நடித்த தனுஷூக்கும் இந்தியவின் உயர்ந்த விருதான “தேசிய திரைப்பட விருது” கிடைத்துள்ளது. இது, சிறந்த நடிகராக தனுஷ் பெரும் இரண்டாவது தேசிய விருதாகும்.
தமிழ் நடிகர்களில், கமல்ஹசான் அவர்கள் மூன்று (மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன்) தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தனுஷ் அவர்கள் இரண்டாவது முறையாக இந்த விருதினை பெறுகிறார்.
2010ஆம் ஆண்டு ஆடுகளம் படத்திற்கும், இப்பொழுது (2019) அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் நடிகர் என்கின்ற தேசிய விருதினை பெறுகிறார். தனுஷ் அவர்கள் பெற்ற இந்த இரண்டு படத்தினையும் இயக்கியவர் வெற்றிமாறன் என்பது கூடுதல் சிறப்பு.
அசுர நடிகன் தனுஷ்
மற்றும்
இந்த படத்தினை இயக்கிய வெற்றிமாறனுக்கு
எங்களின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த படத்தில் வரும் சமூகம் சார்ந்த வசனம்,
“காடு இருந்தா எடுத்துகிடுவானுவ,
ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ,
ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது…”
“படி அதிகாரத்துக்கு வா,
அவன் உனக்கு செஞ்சத,
நீ எவனுக்கும் செய்யாத…”
“ஒரே மண்ணுல பொறந்து,
ஒரே மொழியதான பேசுறோம்,
ஒன்னா வாழ முடியாதா?”
தாஜூதீன்
👍
LikeLike
Sema movie vetrimaran vera level
LikeLike
கல்வி சாலைகள் பல இ௫ந்தும் இன்று அறிஞர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது ஏனெனில் இது போன்ற சினிமா துறையின் ஆளுமை வளர்ச்சி மற்றும் அதன் போலி வசீகரமும் தான். 3 மணி நேரத்தில் 30 செகண்ட் மெசேஜ் மட்டுமே பார்க்க முடியும் மற்ற 97% சினிமா வக்கிரம், சபலம், சண்டை , தவறான உறவு முறை, பெண்களை போதைப்பொருாக சித்தரிக்கும் சீர்கேடுகள் நிறைந்த ஒரு *கனவு உலகின் ராஜா சினிமா* அதை ஒரு பொ௫ட்டாக நினைப்பது தவறு,,,,,,,,,,,
LikeLike
👍
LikeLike