02-அக்டோபர்-2021
இங்கிலாந்து சாம்ராஜ்யத்திலிருந்து, இந்திய சுதந்திரம் பெற பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவர் மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்த மகாத்மா காந்தி அவர்களை தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் மகாத்மா காந்தியடிகள் அவர்கள் பிறந்தார்.
மாகத்மா காந்தி என்று சொன்னவுடன், நமக்கு நினைவில் வருவது சத்தியாகிரகம் என்று அறியப்பட்ட அறவழிப் போராட்டம் தான். இப்போராட்டம் இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது. இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமையேற்று பல்வேறு போராட்டங்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.

மகாத்மா காந்தியடிகள் நடத்திய போராட்டங்களில் மிக முக்கியமானவைகளில், தான்டி யாத்திரை (உப்பு சத்தியாகிரகம்), வெள்ளையனே வெளியேறு (ஆகஸ்ட புரட்சி) , உண்ணாநிலைப் போராட்டங்களாகும். இவ்வாறான அறவழிப் போராட்ட வழிமுறைகளை கடைப்பிடித்து ஆங்கிலேயர்களிடமிருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர செய்தார்.
தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினமான இன்று அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும்
தேசத்தின் தந்தை, மகாத்மா காந்தி அவர்களி்ன்
பிறந்த தினமான இன்று (02-10-2021),
அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறுவோம்.
நன்றாக இருந்தது. இன்னும் அதிகமாக எதிர் பார்த்தேன் இந்த நாளில் காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தை பற்றி.
LikeLike
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் .
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே.
பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே .
கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!
காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே .
நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை
LikeLike