
கடந்த பல வருடங்களாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டனர். இன்று அனைத்து முன்னனி நிறுவனங்களும் வெற்றிகரமாக மின்சார வாகனங்களை உருவாக்கி தங்களின் முதல் தலைமுறை மின்சார வாகனத்தை வர்த்தகத்துக்கு வந்துள்ளது.
மின்சார வாகனம் வாங்குவதில் அனைவருக்கும் ஆர்வம் இருந்தாலும் காரின் விலை அதிகமாக இருப்பதினால், நடுத்தர வர்க்கத்துக்கு மின்சார வாகனம் எட்டாக்கனியாக இருக்கிறது. வரும் காலங்களில் மின்சார வாகனத்தின் விலை குறைந்து அனைவருக்குமானதாக மாறும் காலம் மிக அருகில் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துதில்லை.
மின்சார வாகனத்தில் இப்போது இருக்கும் நிலையில் (03-10-2021), நன்மை மற்றும் தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. அவைகளில் சில
நன்மைகள் | தீமைகள் |
---|---|
குறைந்த எரிபொருள் செலவுகள் | வாகனத்தின் விலை அதிகம் |
கார்பன் உமிழ்வைக் குறைக்கும் | குறைந்த சார்ஜிங் நிலையங்கள் |
குறைந்த பராமரிப்பு தேவைகள் | சார்ஜ் செய்வது நீண்ட நேரம் எடுக்கும் |
எளிதான ஓட்டுநர் செயல்பாடு | |
மென்மையான மற்றும் கிட்டத்தட்ட சத்தமில்லாத ஓட்டுநர் அனுபவம் |
மின்சார வாகனம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமானால் சார்ஜ் நிலையங்களும் அதிகமாகும் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சார்ஜ் செய் எடுத்துக்கொள்ளும் நேரம் படிப்படியாக குறையும். ஆகையினால் இன்று தீமைகளாக இருக்கும் பல நன்மைகளாக மாறும் காலம் விரைவில்.
2025 ஆம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களி்ன் பயன்பாடு அனைவருக்குமானதாக மாறும் என்ற நம்பிக்கையில் …