21-10-2021

அரசியலில் வாரிசுக்கு என்ன வேலை என்று தன்னுடைய கடும் எதிர்ப்பை திமுகவின் அன்றைய தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் காட்டிவிட்டு, மதிமுக என்கின்ற கட்சியை உருவாக்கினார் வைகோ. ஆனால் இன்று மதிமுகாவும் வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் வாரிசுக்கு கட்சியில் பதவி தருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதனை வைகோ அவர்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார். தன் மகன் துரை அவர்களுக்கு மதிமுகவின் முக்கியப் பதவியான தலைமைக் கழகசெயலாளர் என்கின்ற பதவியை கொடுத்ததின் மூலமாக தானும் வாரிசு அரசியலுக்கு எதிரி இல்லை என்று இந்த உலகுக்கு உணர்த்தியுள்ளார். இதில் மிகவும் கவனிக்கவேண்டியது என்னவென்றால், மதிமுக என்கின்ற கட்சி உருவாகியதே வாரிசு அரசியலை எதிர்த்துதான்.

திமுகவின் தலைவர், கலைஞர் கருணாநிதி அவர்கள் அன்று செய்தது தவறு இல்லை என்று
வைகோ அவர்கள் ஒரு தந்தையாக இன்று நன்கு உணர்ந்திருப்பார்.