

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இன்று நடைபெறுகின்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகும். இன்று வெற்றி பெறும் அணி கால்றுதிக்கு தகுதி பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கின்றது. ஆகையினால், இன்றைய போட்டி இரண்டு அணிக்கும் இறுதிப்போட்டியை போன்றதாகும்.
கேப்டனாக கோலிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியம் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கியது. ICC உலக டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை (இரண்டு போட்டிகள் தான் இந்தியா மற்றும் நியுசிலாந்து விளையாடியுல்லது) இந்தியா நியூசிலாந்தை வென்றதில்லை என்பதுதான். அன்று பாகிஸ்தான் அணிக்கு இருந்து அதே அழுத்தம், இன்று நமது அணிக்கு இருக்கிறது.

இரண்டு அணிக்குமே வெற்றி முக்கியம் என்பதினால், இன்று நடைபெறும் விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.