நடிகர் ரஜினிகாந்த நேற்றிரவு காவேரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்,

“சிகிச்சை முடிந்தது. நான் நலமாக உள்ளேன். இரவு தான் நான் வீடு திரும்பினேன். எனது உடல்நலனுக்குப் பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது நலன் குறித்து விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று கூறியுள்ளார்.