
நீங்கள் ஜெய் பீம் திரைப்படத்தை பற்றி எழுதியதில், கீழேயுள்ள பத்தியை இருளர் சமுதாயத்தின் ஒருவனாக நினைத்து படிக்கும் பொழுது, இதனை நீங்கள் மேலிருந்து கீழே உள்ளவர்களுக்கு சொல்வது போன்ற ஒரு உணர்வு எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு? இப்போழுது நீங்கள் எழுதியதை மறுபடியும் படித்துப் பாருங்கள், எப்படி உணர்கிறீர்கள்.
“ஆனால், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினருக்கென ஒரு கடமை இருக்கிறது. இந்தத் திரைப்படம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் பண்பாட்டு மூலதனத்தை வளர்த்தெடுப்பதுதான் அது. இந்தப் படம் இருளர் மக்களைக் கடுமையான உழைப்பாளிகளாக, மூலிகைகள்- மருத்துவ அறிவு கொண்டவர்களாக, காசுக்கோ பொருளுக்கோ ஆசைப் படாதவர்களாக, பொய் பேசாதவர்களாக, சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர்களாகக் காட்டியிருக்கிறது. பொதுமக்களின் முன்னால் ஒரு சமூகத்துக்கு இத்தகைய நற்சான்றுகள் வழங்கப்படுவது மிகவும் அரிது. அதிலும் குறிப்பாக அந்த சமூகத்தைச் சாராத ஒருவர் அந்த நற்சான்றுகளை வழங்கும்போது அது சாதிப் பெருமிதமென்னும் சகதிக்குள் சிக்காமல் தப்பித்துக்கொள்கிறது. இதுவொரு வெற்றிப் படம். அதனால் இந்த நற்சான்றுகள் பொதுமக்களின் கூட்டு நினைவில் ஆழப் பதிந்துவிடும். அப்போது இருளர் சமூகத்துக்கு அது மிகப்பெரிய பண்பாட்டு மூலதனமாக மாறும். அதை வளர்த்தெடுப்பது அவர்களது கடமை மட்டுமல்ல சவாலும்கூட.“