காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல் அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் உதயா என்பவரின் உயிரைக் தக்க சமயத்தில் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குறியது. Continue reading காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

T20 கிரிக்கெட் – இன்று வெற்றி முக்கியம் கோலி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இன்று நடைபெறுகின்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகும். இன்று வெற்றி பெறும் அணி கால்றுதிக்கு தகுதி பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கின்றது. ஆகையினால், இன்றைய போட்டி இரண்டு அணிக்கும் இறுதிப்போட்டியை போன்றதாகும். கேப்டனாக கோலிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியம் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கியது. ICC உலக டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை (இரண்டு போட்டிகள் தான் இந்தியா மற்றும் நியுசிலாந்து விளையாடியுல்லது) இந்தியா நியூசிலாந்தை வென்றதில்லை என்பதுதான். அன்று பாகிஸ்தான் அணிக்கு இருந்து அதே அழுத்தம், இன்று நமது … Continue reading T20 கிரிக்கெட் – இன்று வெற்றி முக்கியம் கோலி!

நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

“அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று. வாழ்த்துகள்” வெ.இறையன்புதமிழ்நாடு தலைமைச் செயலாளர் Continue reading நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

இன்று மேட்டூர் அருகில் கூழையூரை சேர்ந்து தனுஷ் என்னும் மாணவன் நீட் தேர்வின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டார் என்று செய்தியை படிக்கும் பாேது நமக்கு மன சோர்வைத்தான் கொடுக்குகிறது. இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் என்னும் கொடுமையினால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். Continue reading மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

21/03/2021 புதுச்சேரி அரசியலில் கட்சியைவிட வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. கட்சி அவர்களி்ன் வெற்றியை மேலும் உறுதி செய்யும் அவ்வளவுதான் கட்சியின் வேலை. இதுதான் தமிழ்நாட்டு அரசியலுக்கும், புதுச்சேரி அரசியலுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். குறிப்பிட்ட தொகுதி வேண்டும் என்பதற்காக, அந்த தொகுதியில் இருக்கும் எம்.எல்.ஏகள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்வார்கள், இருந்தும் அந்த வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏவாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் … Continue reading டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

புதுச்சேரியில் புதுமையான முயற்சி – Dragon Fruit விவசாயம்

விவசாயத்தில் யார் புதிய முயற்சியை செய்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பதை உண்மையாக்கி கொண்டிருக்கிறார், புதுவையை சேர்ந்த திரு. செல்வமணி அவர்கள். புதிய முயற்சியாக Dragon Fruit விவசாயத்தை முன்னேடுத்து புதுச்சேரி அருகில் உள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் பயிரிட்டுள்ளார். இந்தப் பழத்தை வேறு யாரும் புதுவை மாநிலத்தில் பயிரிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. செல்வமணியிடம், ஒரு சில மணித்துளிகள் பேசினாலே நமக்கு ஒன்று தெளிவாக தெரிகிறது, இந்த Dragon Fruitயை தன் நிலத்தில் பயிரிடுவதற்கு முன், எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று. இதற்காக பல மாதங்கள் Dragon Fruitயின் தன்மைகள், இங்கு … Continue reading புதுச்சேரியில் புதுமையான முயற்சி – Dragon Fruit விவசாயம்

தென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்

ஒரு வருடத்திற்கு பிறகு, கடந்த வாரம் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இரண்டு நாள் பயணமாக சென்று வந்தோம். தென்னிந்தியாவின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் என்றும் அனைவருக்கும் பிடித்த மலைப்பிரதேசம். எத்தனை தடவை போனாலும், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய இடத்துக்கு வந்த அனுபவம் தான் ஏற்படும். உன்னுடைய கார் பாண்டிச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு தானாக சென்றுவிடும் என்று விளையாட்டாக நண்பர்கள் சொல்வார்கள், அந்த அளவுக்கு கொடைக்கானல் என் மனதுக்கு பிடித்த இடங்களில் முதன்மையானது. வெள்ளிக்கிழமை (18/12/2020), இரவு 8 30 மணியளவில் நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டோம். அம்மா, இரவு சாப்பாடாக … Continue reading தென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்

கொரோனாவினால் ஏற்பட்ட நன்மைகள்

2020ஆம் ஆண்டு அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. அப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் வாட்டி வதைத்தது என்று சொல்லலாம். பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிய காலகட்டம். இப்படி பல துன்பங்கள் இருந்தாலும், ஒரு சில (விரல் விட்டு என்னும் அளவுக்கு) நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. என் பார்வையில், முக்கிய நன்மைகள். இயற்கை மருந்தை ஊக்குவித்தது (வீட்டில் இருக்கும் பொருட்களை மருந்தாக மாற்றியது) இந்த நவீன காலகட்டத்தில் நம் முன்னோர்களின் வழிமுறைகளை பலவற்றை மறந்து இருக்கிறோம் அவற்றில் முதன்மையான ஒன்று … Continue reading கொரோனாவினால் ஏற்பட்ட நன்மைகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2021

2020 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் கடினமான ஆண்டாக இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இன்று பிறந்துள்ள 2021 ஆம் ஆண்டு, அனைவருக்கும் நல் வருடமாக அமைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறாம். தாஜூதீன் Continue reading இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2021

ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது கட்சி தொடங்குவது உறுதி என்றும், எப்போழுது கட்சியை தொடங்கப்படும் என்று சொல்வதற்கு தேதி குறித்திருக்கிறார் ரஜினிகாந்த். பல தயக்கங்களை கடந்து இப்போழுது அரசியலுக்கு வரும் அறிக்கையை கொடுத்துள்ளார். அனேகமாக அனைவரும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முடிவுக்கு வந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில், நடிகர் ரஜினியின் அரசியல் பேச்சுக்கள், தன்னுடைய படங்களி்ன் வியாபாரத்திற்கு பயன்பட்டது, ஆனால் அரசியல்வாதி ரஜினியின் நடவடிக்கைகள் இனி எப்படி, யாருக்கு பயன்படும் என்பதை ஜனவரி … Continue reading ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…