தொடரும் பாலியல் தொல்லைகள் …

14-Nov-2021 சில வருடங்களாக பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர்களினால் பாலியல் தொல்லைகள் கொடுப்பது தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. இதில், பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சில தினங்களுக்கு முன், கோவையில் 12-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த குழந்தையை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறான் ஆசிரியர் என்கின்ற போர்வையில் மிதுன் சக்ரவர்த்தி என்கின்ற கொடூரன். கடந்த ஆறு மாசமா என் பிள்ளைக்கு அந்த ஆசிரியரால் தொல்லை இருந்திருக்கு. நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டோம். பஸ்ல போகும்போது ரெண்டு பேர் இடிச்ச மாதிரி நெனச்சிக்கிட்டு விட்டுடுங்க. பெரிதுபடுத்தினா, உங்க பேரும் கெடும்னு சொல்லி பள்ளி நிர்வாகம் எந்த … Continue reading தொடரும் பாலியல் தொல்லைகள் …

அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

ஜெய்பீம் திரைபடத்தின் மூலம் தான் சார்ந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகளையும் மற்றும் நேரடி மிரட்டலுமாக நீண்ட கடிதம் எழுதியுள்ளார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள். அந்த கடிதத்தின் சுருக்கம் மற்றும் மிக முக்கியமானது, படத்தில் இரண்டு தவறுகளை சூட்டிக் காட்டுகிறார். ஒன்று அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது. மற்றொன்று, படத்தின் காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் குருமூர்த்தி என்று பெயர் சூட்டியது (உண்மையான நிகழ்வில் அந்தோணிசாமி என்பது தான் ஆய்வாளரின் பெயர்). இந்த இரண்டு குறியீடுகளை கண்டித்துள்ளார். மேலும், திரு. … Continue reading அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

ஜெய் பீம் – திரு. ரவிக்குமார் எம்பி அவர்களுக்கு ஒரு கேள்வி?

நீங்கள் ஜெய் பீம் திரைப்படத்தை பற்றி எழுதியதில், கீழேயுள்ள பத்தியை இருளர் சமுதாயத்தின் ஒருவனாக நினைத்து படிக்கும் பொழுது, இதனை நீங்கள் மேலிருந்து கீழே உள்ளவர்களுக்கு சொல்வது போன்ற ஒரு உணர்வு எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு? இப்போழுது நீங்கள் எழுதியதை மறுபடியும் படித்துப் பாருங்கள், எப்படி உணர்கிறீர்கள். “ஆனால், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினருக்கென ஒரு கடமை இருக்கிறது. இந்தத் திரைப்படம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் பண்பாட்டு மூலதனத்தை வளர்த்தெடுப்பதுதான் அது. இந்தப் படம் இருளர் மக்களைக் கடுமையான உழைப்பாளிகளாக, மூலிகைகள்- மருத்துவ அறிவு கொண்டவர்களாக, காசுக்கோ பொருளுக்கோ ஆசைப் படாதவர்களாக, பொய் … Continue reading ஜெய் பீம் – திரு. ரவிக்குமார் எம்பி அவர்களுக்கு ஒரு கேள்வி?

சுயமரியாதையும், சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! – முதல்வர் மு.க. ஸடாலின்

03-நவம்பர்-2021 பூஞ்சேரி கிராமத்தில் வாழும் இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கு பட்டா, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவர்களின் வாழ்வியலுக்கு தேவையான அதிமுக்கியமான உரிமைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸடாலின் அவர்கள் இன்று வழங்கினார். இவர்களின் இன வாழ்வில் ஒளியேற்றும் நாளாக ஆக்கினார். தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை அனைவருக்குமாக செம்மனே செய்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் ஒளியை கொடுப்பார் என்கின்ற நம்பிக்கையை தன்னுடைய செயல்களின் மூலம் நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களிள் குரலாக நான் இருக்கிறேன் … Continue reading சுயமரியாதையும், சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! – முதல்வர் மு.க. ஸடாலின்

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

03-நவம்பர்-2021 ஒன்றிய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வரியை சுமார் 5 ரூபாய் நாடு முழுவதுக்கும் குறைத்துள்ளது, இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அரசும் சுமார் 7 ரூபாய் மாநில வரியிலிருந்து குறைத்துள்ளது. ஆகையினால் புதுச்சேரியில் பெட்ரோலுக்கும் சுமார் 13 ரூபாயும், டீசலுக்கு சுமார் 19 ரூபாயும் குறைந்துள்ளது, இது உள்ளபடியே மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி. புதுச்சேரி மக்களுக்கு, முதல்வர் ரங்கசாமி அவர்கள் வழங்கிய மிகப்பெரிய தீபாவாளி பரிசாக மக்கள் இதனை பார்க்கிறார்கள். புதுச்சேரியில் இன்று (03/11) பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து … Continue reading புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

புத்தாடைகள் அணிந்து, குடும்பத்துடன் இனிப்புகள் சாப்பிட்டு, தீப விளக்கேத்தி அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மின்னிட கொண்டாடப்படும் தீபாவளி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்… Continue reading இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நடிகர் ரஜினிகாந்த – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

நடிகர் ரஜினிகாந்த நேற்றிரவு காவேரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “சிகிச்சை முடிந்தது. நான் நலமாக உள்ளேன். இரவு தான் நான் வீடு திரும்பினேன். எனது உடல்நலனுக்குப் பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது நலன் குறித்து விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார். Continue reading நடிகர் ரஜினிகாந்த – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

பெயர் மாற்றம் – Facebook to Meta

மெட்டாவேர்ஸை வெரஜுவல் என்வயர்மெண்ட் என்று அழைத்தார் மார்க் ஜுக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க். இனி Facebook, WhatApp, Instagram, Messenger ஆகியவை மெட்டா என்கின்ற நிறுவனத்தின் கீழ் வருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் (virtual environment headsets), ஆக்மென்ட் ரியாலிட்டி கண்ணாடிகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் திரையைப் பார்ப்பதன் மூலம் வேறு உலகத்திற்குச் செல்லலாம், கேம்களை விளையாடலாம், ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். Metaverse வில், நீங்கள் வழக்கமாக செய்யும் அனைத்தையும் நீங்கள் செய்ய முடியும். Metaverse … Continue reading பெயர் மாற்றம் – Facebook to Meta

அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு

இன்றைய காலகட்டங்களில் இளவயது மாரடைப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்பது மிகுந்த கவலையை கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பினால் மறைந்தார் என்கின்ற அதிர்ச்சி செய்தி நம்மை மேலும் கவலையடைய செய்கிறது. அவரின் மறைவு, கன்னட திரையுலகை மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பல தலைவர்கள் தங்களின் இரங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். புனித் அவர்களின் இரு கண்களைத் தானமாக கொடுத்துள்ளார். புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம். Continue reading அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு

வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

21-10-2021 அரசியலில் வாரிசுக்கு என்ன வேலை என்று தன்னுடைய கடும் எதிர்ப்பை திமுகவின் அன்றைய தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் காட்டிவிட்டு, மதிமுக என்கின்ற கட்சியை உருவாக்கினார் வைகோ. ஆனால் இன்று மதிமுகாவும் வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் வாரிசுக்கு கட்சியில் பதவி தருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதனை வைகோ அவர்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார். தன் மகன் துரை அவர்களுக்கு மதிமுகவின் முக்கியப் பதவியான தலைமைக் கழகசெயலாளர் என்கின்ற பதவியை கொடுத்ததின் மூலமாக தானும் வாரிசு அரசியலுக்கு எதிரி இல்லை என்று இந்த உலகுக்கு … Continue reading வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ