காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல் அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் உதயா என்பவரின் உயிரைக் தக்க சமயத்தில் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குறியது. Continue reading காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

ஜெய்பீம் திரைபடத்தின் மூலம் தான் சார்ந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகளையும் மற்றும் நேரடி மிரட்டலுமாக நீண்ட கடிதம் எழுதியுள்ளார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள். அந்த கடிதத்தின் சுருக்கம் மற்றும் மிக முக்கியமானது, படத்தில் இரண்டு தவறுகளை சூட்டிக் காட்டுகிறார். ஒன்று அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது. மற்றொன்று, படத்தின் காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் குருமூர்த்தி என்று பெயர் சூட்டியது (உண்மையான நிகழ்வில் அந்தோணிசாமி என்பது தான் ஆய்வாளரின் பெயர்). இந்த இரண்டு குறியீடுகளை கண்டித்துள்ளார். மேலும், திரு. … Continue reading அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

ஜெய் பீம் – திரு. ரவிக்குமார் எம்பி அவர்களுக்கு ஒரு கேள்வி?

நீங்கள் ஜெய் பீம் திரைப்படத்தை பற்றி எழுதியதில், கீழேயுள்ள பத்தியை இருளர் சமுதாயத்தின் ஒருவனாக நினைத்து படிக்கும் பொழுது, இதனை நீங்கள் மேலிருந்து கீழே உள்ளவர்களுக்கு சொல்வது போன்ற ஒரு உணர்வு எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு? இப்போழுது நீங்கள் எழுதியதை மறுபடியும் படித்துப் பாருங்கள், எப்படி உணர்கிறீர்கள். “ஆனால், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினருக்கென ஒரு கடமை இருக்கிறது. இந்தத் திரைப்படம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் பண்பாட்டு மூலதனத்தை வளர்த்தெடுப்பதுதான் அது. இந்தப் படம் இருளர் மக்களைக் கடுமையான உழைப்பாளிகளாக, மூலிகைகள்- மருத்துவ அறிவு கொண்டவர்களாக, காசுக்கோ பொருளுக்கோ ஆசைப் படாதவர்களாக, பொய் … Continue reading ஜெய் பீம் – திரு. ரவிக்குமார் எம்பி அவர்களுக்கு ஒரு கேள்வி?

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

03-நவம்பர்-2021 ஒன்றிய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வரியை சுமார் 5 ரூபாய் நாடு முழுவதுக்கும் குறைத்துள்ளது, இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அரசும் சுமார் 7 ரூபாய் மாநில வரியிலிருந்து குறைத்துள்ளது. ஆகையினால் புதுச்சேரியில் பெட்ரோலுக்கும் சுமார் 13 ரூபாயும், டீசலுக்கு சுமார் 19 ரூபாயும் குறைந்துள்ளது, இது உள்ளபடியே மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி. புதுச்சேரி மக்களுக்கு, முதல்வர் ரங்கசாமி அவர்கள் வழங்கிய மிகப்பெரிய தீபாவாளி பரிசாக மக்கள் இதனை பார்க்கிறார்கள். புதுச்சேரியில் இன்று (03/11) பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து … Continue reading புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

21-10-2021 அரசியலில் வாரிசுக்கு என்ன வேலை என்று தன்னுடைய கடும் எதிர்ப்பை திமுகவின் அன்றைய தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் காட்டிவிட்டு, மதிமுக என்கின்ற கட்சியை உருவாக்கினார் வைகோ. ஆனால் இன்று மதிமுகாவும் வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் வாரிசுக்கு கட்சியில் பதவி தருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதனை வைகோ அவர்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார். தன் மகன் துரை அவர்களுக்கு மதிமுகவின் முக்கியப் பதவியான தலைமைக் கழகசெயலாளர் என்கின்ற பதவியை கொடுத்ததின் மூலமாக தானும் வாரிசு அரசியலுக்கு எதிரி இல்லை என்று இந்த உலகுக்கு … Continue reading வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம்

02-அக்டோபர்-2021 இங்கிலாந்து சாம்ராஜ்யத்திலிருந்து, இந்திய சுதந்திரம் பெற பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவர் மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்த மகாத்மா காந்தி அவர்களை தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் மகாத்மா காந்தியடிகள் அவர்கள் பிறந்தார். மாகத்மா காந்தி என்று சொன்னவுடன், நமக்கு நினைவில் வருவது சத்தியாகிரகம் என்று அறியப்பட்ட அறவழிப் போராட்டம் தான். இப்போராட்டம் இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது. இந்திய தேசிய … Continue reading மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம்

மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

இன்று மேட்டூர் அருகில் கூழையூரை சேர்ந்து தனுஷ் என்னும் மாணவன் நீட் தேர்வின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டார் என்று செய்தியை படிக்கும் பாேது நமக்கு மன சோர்வைத்தான் கொடுக்குகிறது. இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் என்னும் கொடுமையினால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். Continue reading மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

ஜனநாயக கடமையாற்றுவோம்…

இன்று (06.04.2021), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நாள். ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான கடமைகளில், முதன்மையானது தன்னுடைய வாக்குகளை தவறாமல் செலுத்துவது ஆகும். மக்களாகிய நாம் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுக்கும் நாள் அனைவரும், தங்களுடைய வாக்குகளை சிந்தித்து நமக்கும், நம்முடைய சுற்றார்களுக்கும் நன்மைகளை செய்யக்கூடிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வாக்கு செலுத்துவோம். பொது மக்களாகிய நமக்கு பயன் தரும் அதிகார வர்க்கத்தை தேர்தெடுப்போம். தாஜூதீன் Continue reading ஜனநாயக கடமையாற்றுவோம்…

ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது கட்சி தொடங்குவது உறுதி என்றும், எப்போழுது கட்சியை தொடங்கப்படும் என்று சொல்வதற்கு தேதி குறித்திருக்கிறார் ரஜினிகாந்த். பல தயக்கங்களை கடந்து இப்போழுது அரசியலுக்கு வரும் அறிக்கையை கொடுத்துள்ளார். அனேகமாக அனைவரும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முடிவுக்கு வந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில், நடிகர் ரஜினியின் அரசியல் பேச்சுக்கள், தன்னுடைய படங்களி்ன் வியாபாரத்திற்கு பயன்பட்டது, ஆனால் அரசியல்வாதி ரஜினியின் நடவடிக்கைகள் இனி எப்படி, யாருக்கு பயன்படும் என்பதை ஜனவரி … Continue reading ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

தேர்தல் வருகிறது – நில் கவனி செல்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அநேகமாக அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. பல மாடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் அனைத்துக் கட்சிக்கும் மிகவும் சவாலாக இருக்கும். அதுவும் இந்த தேர்தல் மதம், ஜாதி மற்றும் வெறுப்பு உணர்வுகளை மையமாக வைத்து நடக்கும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் நன்றாக தெரிகிறது என்பதுதான் உண்மை. அண்மையில், செய்தி ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என்பது மிகவும் கவனமாக அதே சமயத்தில் தெளிவான திட்டமிடல் இருக்கும் என்பதுதான் அனைவரது கருத்து. அவர்களின் மீது ஒரு கட்சியின் சார்பு … Continue reading தேர்தல் வருகிறது – நில் கவனி செல்