அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

ஜெய்பீம் திரைபடத்தின் மூலம் தான் சார்ந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகளையும் மற்றும் நேரடி மிரட்டலுமாக நீண்ட கடிதம் எழுதியுள்ளார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள். அந்த கடிதத்தின் சுருக்கம் மற்றும் மிக முக்கியமானது, படத்தில் இரண்டு தவறுகளை சூட்டிக் காட்டுகிறார். ஒன்று அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது. மற்றொன்று, படத்தின் காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் குருமூர்த்தி என்று பெயர் சூட்டியது (உண்மையான நிகழ்வில் அந்தோணிசாமி என்பது தான் ஆய்வாளரின் பெயர்). இந்த இரண்டு குறியீடுகளை கண்டித்துள்ளார். மேலும், திரு. … Continue reading அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

03-நவம்பர்-2021 ஒன்றிய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வரியை சுமார் 5 ரூபாய் நாடு முழுவதுக்கும் குறைத்துள்ளது, இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அரசும் சுமார் 7 ரூபாய் மாநில வரியிலிருந்து குறைத்துள்ளது. ஆகையினால் புதுச்சேரியில் பெட்ரோலுக்கும் சுமார் 13 ரூபாயும், டீசலுக்கு சுமார் 19 ரூபாயும் குறைந்துள்ளது, இது உள்ளபடியே மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி. புதுச்சேரி மக்களுக்கு, முதல்வர் ரங்கசாமி அவர்கள் வழங்கிய மிகப்பெரிய தீபாவாளி பரிசாக மக்கள் இதனை பார்க்கிறார்கள். புதுச்சேரியில் இன்று (03/11) பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து … Continue reading புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

புத்தாடைகள் அணிந்து, குடும்பத்துடன் இனிப்புகள் சாப்பிட்டு, தீப விளக்கேத்தி அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மின்னிட கொண்டாடப்படும் தீபாவளி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்… Continue reading இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு

இன்றைய காலகட்டங்களில் இளவயது மாரடைப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்பது மிகுந்த கவலையை கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பினால் மறைந்தார் என்கின்ற அதிர்ச்சி செய்தி நம்மை மேலும் கவலையடைய செய்கிறது. அவரின் மறைவு, கன்னட திரையுலகை மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பல தலைவர்கள் தங்களின் இரங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். புனித் அவர்களின் இரு கண்களைத் தானமாக கொடுத்துள்ளார். புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம். Continue reading அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு

மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம்

02-அக்டோபர்-2021 இங்கிலாந்து சாம்ராஜ்யத்திலிருந்து, இந்திய சுதந்திரம் பெற பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவர் மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்த மகாத்மா காந்தி அவர்களை தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் மகாத்மா காந்தியடிகள் அவர்கள் பிறந்தார். மாகத்மா காந்தி என்று சொன்னவுடன், நமக்கு நினைவில் வருவது சத்தியாகிரகம் என்று அறியப்பட்ட அறவழிப் போராட்டம் தான். இப்போராட்டம் இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது. இந்திய தேசிய … Continue reading மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம்

மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

இன்று மேட்டூர் அருகில் கூழையூரை சேர்ந்து தனுஷ் என்னும் மாணவன் நீட் தேர்வின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டார் என்று செய்தியை படிக்கும் பாேது நமக்கு மன சோர்வைத்தான் கொடுக்குகிறது. இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் என்னும் கொடுமையினால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். Continue reading மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

03-05-2020 தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த முடிவு மிகவும் ஆபத்தானது மட்டுமில்லாமல் இதுவரை நாம் காப்பாற்றிய அனைத்து முயற்சிகளையும் வீணாக்குவதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அரசுகளுக்கு இப்போழுது இரண்டு மிக முக்கிய பிரச்சனை, ஒன்று மக்களை கோவிட்-19யில் இருந்து காப்பாற்றுவது மற்றொன்று நாட்டின் பொருளாதார பிரச்சனையை சமாளிப்பது. இந்த இரண்டு பிரச்சனையில், அரசுகள் என்ன செய்யவதன்று அறியாமல், … Continue reading கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

கோவிட்-19 – உதவும் கரங்கள்…

கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை தம்பி திரு. THN. அசாருதீன் அவர்களின் சார்பாக 50 குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது மிகவும் மகிழ்ச்சி. அதுவும் ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களை 50 குடும்பத்திற்கு கொடுத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இந்த காலகட்டத்தில் இப்படியான உதவி என்பது மிகவும் அவசியமானது என்பது மட்டுமில்லாமல் நமது … Continue reading கோவிட்-19 – உதவும் கரங்கள்…

இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

ஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா இருப்பது, நம் நாட்டின் பொருளாதரத்தில் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகிறது. கோவிட்-19யின் பாதிப்பு, இன்னும் நம் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு விழ்ச்சி அடைய போகிறது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. நாடு பண மதிப்பு (1 டாலர் மதிப்பு) சீனா 7.07 ஆப்கானிஸ்தான் 75.88 பூட்டான் 76.91 இந்தியா … Continue reading இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!

கோவிட்-19, இந்த நோய் நம் கண்னுக்கு தெரியவில்லை என்றாலும், அதன் பாதிப்பு மிகவும் கொடுமையாக நமக்கு தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நோய் தொற்றினால் உடனடியாக மரணம் இல்லை என்றாலும், இந்த நோய் நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகவும் அதிகம். இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு வித பயத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சுமார் 75% பேர் எப்போழுதும் இல்லாத அளவுக்கு தங்களின் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள் மீதியிருக்கும், 25% பேர் இதன் பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டும் பாதிப்பை கொடுக்காது, அவர்களை சார்ந்துள்ள … Continue reading கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!