அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

ஜெய்பீம் திரைபடத்தின் மூலம் தான் சார்ந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகளையும் மற்றும் நேரடி மிரட்டலுமாக நீண்ட கடிதம் எழுதியுள்ளார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள். அந்த கடிதத்தின் சுருக்கம் மற்றும் மிக முக்கியமானது, படத்தில் இரண்டு தவறுகளை சூட்டிக் காட்டுகிறார். ஒன்று அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது. மற்றொன்று, படத்தின் காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் குருமூர்த்தி என்று பெயர் சூட்டியது (உண்மையான நிகழ்வில் அந்தோணிசாமி என்பது தான் ஆய்வாளரின் பெயர்). இந்த இரண்டு குறியீடுகளை கண்டித்துள்ளார். மேலும், திரு. … Continue reading அன்புமணியின் கேள்வி, சூர்யாவின் பதில்

நடிகர் ரஜினிகாந்த – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

நடிகர் ரஜினிகாந்த நேற்றிரவு காவேரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “சிகிச்சை முடிந்தது. நான் நலமாக உள்ளேன். இரவு தான் நான் வீடு திரும்பினேன். எனது உடல்நலனுக்குப் பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது நலன் குறித்து விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார். Continue reading நடிகர் ரஜினிகாந்த – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

தேசிய திரைப்பட விருது – அசுர நடிகனுக்கு தேசிய விருது

2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருது கிடைத்துள்ளது. அசுரன் திரைப்படத்திற்கும், அதில் நடித்த தனுஷூக்கும் இந்தியவின் உயர்ந்த விருதான “தேசிய திரைப்பட விருது” கிடைத்துள்ளது. இது, சிறந்த நடிகராக தனுஷ் பெரும் இரண்டாவது தேசிய விருதாகும். தமிழ் நடிகர்களில், கமல்ஹசான் அவர்கள் மூன்று (மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன்) தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தனுஷ் அவர்கள் இரண்டாவது முறையாக இந்த விருதினை பெறுகிறார். 2010ஆம் ஆண்டு ஆடுகளம் படத்திற்கும், இப்பொழுது (2019) அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் நடிகர் என்கின்ற … Continue reading தேசிய திரைப்பட விருது – அசுர நடிகனுக்கு தேசிய விருது

யோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, யோகிபாபு ஸடைலில் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா, யோகிபாபு இதில் யாருடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்பது தான் இன்றைய டிரெண்ட் இப்படி இருந்த பிரியங்கா சோப்ரா இப்படி ஆயிட்டாரே Continue reading யோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா

ரஜினியின் அரசியல் விளையாட்டு

கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.  அந்த பேச்சில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் தன் கருத்தை பதிவுசெய்தார்.  தூத்துக்குடி போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களை பார்ப்பதற்காக தூத்துக்குடி சென்று பார்த்து விட்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது எதற்கெடுத்தாலும் … Continue reading ரஜினியின் அரசியல் விளையாட்டு

நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள். சிவக்குமார் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவார். தன்னுடைய பேச்சாற்றலினால், இந்து சமய புராணங்களை அழகிய தமிழில் மிகவும் சுவாரசியமாக  அதுவும் சில மணி நேரங்களில் அனைத்துச் சம்பவங்களையும் தெளிவாக எடுத்துரைப்பார்.  அதுமட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரபலங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை மிகச் சுருக்கமாகவும், சில சுவாரசிய சம்பவங்களையும் நமக்கு எடுத்துரைப்பார். சில சமயங்களில் அவரின் பேச்சு, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கும். (குறிப்பாக பெரும்பாலான வாழ்க்கை குறிப்பு பேச்சுகள், … Continue reading நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு

சர்கார்

(இளைய)தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகிய நான்கு இமயங்கள் இணைந்து சர்கார் என்ற பிரம்மாண்ட படைப்பை வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் இந்தச் சமயத்தில், முருகதாஸ் அவர்களுக்கு எப்போழுதும் வரும் கதை என்னுடையது என்ற பிரச்சனை இந்தப்படத்திற்கும் வருண் ராஜேந்திரன் மூலம் வந்துள்ளது.  இன்று பல திரைமறை சமரசத்துக்குப் பிறகு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருண் ராஜேந்திரன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அவருடைய பெயரையும் படத்தில் இணைத்துள்ளார்கள். வருண் ராஜேந்திரன் தனது பேட்டியில் விஜய் சர்கார் அமைக்க என்னுடைய செங்கோலை பரிசாக … Continue reading சர்கார்

பரியேறும் பெருமாள் – பார்வை

ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள்.  மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு. ஆணவக்கொலைகளின் பின்புறம், சாதிய அடக்குமுறை, ஒடுக்கப்பட்டுள்ளவர்களின் இன்றைய நிலை போன்றவற்றை மிகவும் கவனமாகவும் மற்றும் நேர்மையாகவும் நம்முன் திரையிட்டு காண்பித்துள்ளார் படத்தின் இயக்குநர் மாரி செல்வராசு அவர்கள்.  கதையின் நாயகன் கதிர். அவரின் அருமையான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார், இந்தப் படத்துக்கா அவரின் முழு உழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லவேண்டும். … Continue reading பரியேறும் பெருமாள் – பார்வை