காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல் அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் உதயா என்பவரின் உயிரைக் தக்க சமயத்தில் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குறியது. Continue reading காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

03-நவம்பர்-2021 ஒன்றிய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வரியை சுமார் 5 ரூபாய் நாடு முழுவதுக்கும் குறைத்துள்ளது, இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அரசும் சுமார் 7 ரூபாய் மாநில வரியிலிருந்து குறைத்துள்ளது. ஆகையினால் புதுச்சேரியில் பெட்ரோலுக்கும் சுமார் 13 ரூபாயும், டீசலுக்கு சுமார் 19 ரூபாயும் குறைந்துள்ளது, இது உள்ளபடியே மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி. புதுச்சேரி மக்களுக்கு, முதல்வர் ரங்கசாமி அவர்கள் வழங்கிய மிகப்பெரிய தீபாவாளி பரிசாக மக்கள் இதனை பார்க்கிறார்கள். புதுச்சேரியில் இன்று (03/11) பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து … Continue reading புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு – முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி

நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

“அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று. வாழ்த்துகள்” வெ.இறையன்புதமிழ்நாடு தலைமைச் செயலாளர் Continue reading நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

இன்று மேட்டூர் அருகில் கூழையூரை சேர்ந்து தனுஷ் என்னும் மாணவன் நீட் தேர்வின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டார் என்று செய்தியை படிக்கும் பாேது நமக்கு மன சோர்வைத்தான் கொடுக்குகிறது. இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் என்னும் கொடுமையினால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். Continue reading மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

கோவிட்-19 – உதவும் கரங்கள்…

கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை தம்பி திரு. THN. அசாருதீன் அவர்களின் சார்பாக 50 குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது மிகவும் மகிழ்ச்சி. அதுவும் ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களை 50 குடும்பத்திற்கு கொடுத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இந்த காலகட்டத்தில் இப்படியான உதவி என்பது மிகவும் அவசியமானது என்பது மட்டுமில்லாமல் நமது … Continue reading கோவிட்-19 – உதவும் கரங்கள்…

இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

ஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா இருப்பது, நம் நாட்டின் பொருளாதரத்தில் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகிறது. கோவிட்-19யின் பாதிப்பு, இன்னும் நம் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு விழ்ச்சி அடைய போகிறது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. நாடு பண மதிப்பு (1 டாலர் மதிப்பு) சீனா 7.07 ஆப்கானிஸ்தான் 75.88 பூட்டான் 76.91 இந்தியா … Continue reading இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

கோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்

புதுச்சேரி முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஒரு மாதமாக அவரின் கீழ் புதுச்சேரி மாநிலம் கோவிட்-19 பாதிப்பு குறைந்து மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் அனைவருக்கும் நிம்மதி. உயிர்க்கொல்லி நோய் கோவிட்-19 இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில், தன்னுடைய நிர்வாக திறமையினால் அதிவிரைவாக செயல்பட்டு, அதே சமயத்தில் கடும் நடவடிக்கையினாலும் இன்று புதுச்சேரி கோவிட்-19 பாதிப்பு குறைந்த மாநிலமாக திகழ்கிறது. புதுச்சேரியல் சில இடங்களில் கோவிட்-19 இருப்பதை கண்டறிந்த உடனே துரிதமாக செயல்பட்டு, அந்த இடத்தை பாதுகாப்பான இடமாக அறிவித்து இன்று கோவிட்-19 மற்ற இடங்களுக்கு … Continue reading கோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். ஆம், குழந்தையின் பார்வையில் இது தாய் தந்தை மற்றும் அவர்களின் குடும்பம் தான் காரணம். இதைதான் இப்போழுது ரஜினியும் சொல்கிறார். எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. 70 வயதை கடந்த பெரியவர்களும் குழந்தைகள்தான் என்று. #savesujith தாஜூதீன் Continue reading பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறு மரணங்கள் தொடர்கதையாக இருக்கிறது, இதற்கு முன் நடந்த மரணங்களில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் அனைவருக்கும் இருக்கும் இப்போதைய மிகப்பெரிய கேள்வி. அதுமட்டுமில்லாமல், குழந்தை கிணற்றில் தன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில், மேலே நாம் குழந்தையை எப்படி மீட்பது என்று தெரியாமல் பல மீட்பு … Continue reading ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

கோடை மழைத் துளி!

கடந்த பல மாதங்களாக வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது, மக்களை மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் இந்த வருடம் வெயில் விட்டுவைக்கவில்லை. இன்று அனைவருக்கும் குளிர்ச்சி செய்தியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய நிம்மதியை இந்த மழை பொது மக்களுக்கும் மற்றும் பல அரசியல் தலைவர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த சில மாதங்கள் தண்ணீர் பிரச்சனையை விட்டுவிட்டு அடுத்ததை நோக்கி பயணிப்போம். Continue reading கோடை மழைத் துளி!