காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல் அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் உதயா என்பவரின் உயிரைக் தக்க சமயத்தில் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குறியது. Continue reading காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

சுயமரியாதையும், சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! – முதல்வர் மு.க. ஸடாலின்

03-நவம்பர்-2021 பூஞ்சேரி கிராமத்தில் வாழும் இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கு பட்டா, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவர்களின் வாழ்வியலுக்கு தேவையான அதிமுக்கியமான உரிமைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸடாலின் அவர்கள் இன்று வழங்கினார். இவர்களின் இன வாழ்வில் ஒளியேற்றும் நாளாக ஆக்கினார். தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை அனைவருக்குமாக செம்மனே செய்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் ஒளியை கொடுப்பார் என்கின்ற நம்பிக்கையை தன்னுடைய செயல்களின் மூலம் நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களிள் குரலாக நான் இருக்கிறேன் … Continue reading சுயமரியாதையும், சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! – முதல்வர் மு.க. ஸடாலின்

நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

“அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று. வாழ்த்துகள்” வெ.இறையன்புதமிழ்நாடு தலைமைச் செயலாளர் Continue reading நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

21-10-2021 அரசியலில் வாரிசுக்கு என்ன வேலை என்று தன்னுடைய கடும் எதிர்ப்பை திமுகவின் அன்றைய தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் காட்டிவிட்டு, மதிமுக என்கின்ற கட்சியை உருவாக்கினார் வைகோ. ஆனால் இன்று மதிமுகாவும் வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் வாரிசுக்கு கட்சியில் பதவி தருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதனை வைகோ அவர்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார். தன் மகன் துரை அவர்களுக்கு மதிமுகவின் முக்கியப் பதவியான தலைமைக் கழகசெயலாளர் என்கின்ற பதவியை கொடுத்ததின் மூலமாக தானும் வாரிசு அரசியலுக்கு எதிரி இல்லை என்று இந்த உலகுக்கு … Continue reading வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

இன்று மேட்டூர் அருகில் கூழையூரை சேர்ந்து தனுஷ் என்னும் மாணவன் நீட் தேர்வின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டார் என்று செய்தியை படிக்கும் பாேது நமக்கு மன சோர்வைத்தான் கொடுக்குகிறது. இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் என்னும் கொடுமையினால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். Continue reading மேட்டூர் தனுஷ் – நீட் தேர்வு – தற்கொலை

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2021

2020 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் கடினமான ஆண்டாக இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இன்று பிறந்துள்ள 2021 ஆம் ஆண்டு, அனைவருக்கும் நல் வருடமாக அமைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறாம். தாஜூதீன் Continue reading இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2021

தேர்தல் வருகிறது – நில் கவனி செல்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அநேகமாக அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. பல மாடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் அனைத்துக் கட்சிக்கும் மிகவும் சவாலாக இருக்கும். அதுவும் இந்த தேர்தல் மதம், ஜாதி மற்றும் வெறுப்பு உணர்வுகளை மையமாக வைத்து நடக்கும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் நன்றாக தெரிகிறது என்பதுதான் உண்மை. அண்மையில், செய்தி ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என்பது மிகவும் கவனமாக அதே சமயத்தில் தெளிவான திட்டமிடல் இருக்கும் என்பதுதான் அனைவரது கருத்து. அவர்களின் மீது ஒரு கட்சியின் சார்பு … Continue reading தேர்தல் வருகிறது – நில் கவனி செல்

கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

03-05-2020 தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த முடிவு மிகவும் ஆபத்தானது மட்டுமில்லாமல் இதுவரை நாம் காப்பாற்றிய அனைத்து முயற்சிகளையும் வீணாக்குவதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அரசுகளுக்கு இப்போழுது இரண்டு மிக முக்கிய பிரச்சனை, ஒன்று மக்களை கோவிட்-19யில் இருந்து காப்பாற்றுவது மற்றொன்று நாட்டின் பொருளாதார பிரச்சனையை சமாளிப்பது. இந்த இரண்டு பிரச்சனையில், அரசுகள் என்ன செய்யவதன்று அறியாமல், … Continue reading கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

கோவிட்-19 – உதவும் கரங்கள்…

கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை தம்பி திரு. THN. அசாருதீன் அவர்களின் சார்பாக 50 குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது மிகவும் மகிழ்ச்சி. அதுவும் ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களை 50 குடும்பத்திற்கு கொடுத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இந்த காலகட்டத்தில் இப்படியான உதவி என்பது மிகவும் அவசியமானது என்பது மட்டுமில்லாமல் நமது … Continue reading கோவிட்-19 – உதவும் கரங்கள்…

கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!

கோவிட்-19, இந்த நோய் நம் கண்னுக்கு தெரியவில்லை என்றாலும், அதன் பாதிப்பு மிகவும் கொடுமையாக நமக்கு தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நோய் தொற்றினால் உடனடியாக மரணம் இல்லை என்றாலும், இந்த நோய் நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகவும் அதிகம். இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு வித பயத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சுமார் 75% பேர் எப்போழுதும் இல்லாத அளவுக்கு தங்களின் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள் மீதியிருக்கும், 25% பேர் இதன் பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டும் பாதிப்பை கொடுக்காது, அவர்களை சார்ந்துள்ள … Continue reading கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!