ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

25-05-2020 இன்று ஈகைத் திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். திருக்குரான் அருளிய ரமலான் மாதத்தில், 30 நாட்களும் உண்ணா நோன்பு இருந்து, அதனை கொண்டாடும் விதமாக ஈகைத் திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும், தங்களின் வீட்டில் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடைகளை அணிந்து, வீட்டிலேயே தொழுகையையும், மகிழ்ச்சியையும் முடித்துக்கொள்ளும் ஒரு ரமலானாக மாறியதில் வருத்தம் இருந்தாலும். இந்த ரமலான் ஒரு வித்தியாசமான ஒன்று தான். தாஜூதீன் Continue reading ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

03-05-2020 தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த முடிவு மிகவும் ஆபத்தானது மட்டுமில்லாமல் இதுவரை நாம் காப்பாற்றிய அனைத்து முயற்சிகளையும் வீணாக்குவதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அரசுகளுக்கு இப்போழுது இரண்டு மிக முக்கிய பிரச்சனை, ஒன்று மக்களை கோவிட்-19யில் இருந்து காப்பாற்றுவது மற்றொன்று நாட்டின் பொருளாதார பிரச்சனையை சமாளிப்பது. இந்த இரண்டு பிரச்சனையில், அரசுகள் என்ன செய்யவதன்று அறியாமல், … Continue reading கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

கோவிட்-19 – உதவும் கரங்கள்…

கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை தம்பி திரு. THN. அசாருதீன் அவர்களின் சார்பாக 50 குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது மிகவும் மகிழ்ச்சி. அதுவும் ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களை 50 குடும்பத்திற்கு கொடுத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இந்த காலகட்டத்தில் இப்படியான உதவி என்பது மிகவும் அவசியமானது என்பது மட்டுமில்லாமல் நமது … Continue reading கோவிட்-19 – உதவும் கரங்கள்…

இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

ஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா இருப்பது, நம் நாட்டின் பொருளாதரத்தில் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகிறது. கோவிட்-19யின் பாதிப்பு, இன்னும் நம் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு விழ்ச்சி அடைய போகிறது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. நாடு பண மதிப்பு (1 டாலர் மதிப்பு) சீனா 7.07 ஆப்கானிஸ்தான் 75.88 பூட்டான் 76.91 இந்தியா … Continue reading இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!

கோவிட்-19, இந்த நோய் நம் கண்னுக்கு தெரியவில்லை என்றாலும், அதன் பாதிப்பு மிகவும் கொடுமையாக நமக்கு தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நோய் தொற்றினால் உடனடியாக மரணம் இல்லை என்றாலும், இந்த நோய் நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகவும் அதிகம். இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு வித பயத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சுமார் 75% பேர் எப்போழுதும் இல்லாத அளவுக்கு தங்களின் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள் மீதியிருக்கும், 25% பேர் இதன் பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டும் பாதிப்பை கொடுக்காது, அவர்களை சார்ந்துள்ள … Continue reading கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!

தேமுதிகவின் இன்றைய நிலை

10.03.2020 மாநிலங்களவைக்கு அறிவித்துள்ள அதிமுக வேட்பாளர்களில் தேமுதிக கட்சிக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் அனைத்து வேட்பாளர்களும் அதிமுகவின் தொண்டனையே வேட்பாளராக அறிவித்து இருப்பார். ஆனால் இன்று 2 வேட்பாளர்களை அதிமுக தன்வசம் வைத்துக்கொண்டு, ஒன்றை ஜிகே வாசனுக்கு (பிஜேபிக்கு) கொடுத்துள்ளதிலிருந்து அதிமுக தனது பாதையை இப்போழுதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போன்று மாற்றியமைத்துக் கொண்டுள்ளது என்பதை நிரூப்பித்துள்ளது. இந்த முடிவினால் தேமுதிகவை நிலைகுலைய வைத்துள்ளது என்றே சொல்லலாம். அதிமுக தேமுதிகவின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறது. இதனை அந்த கட்சி எப்படி எதிர்கொள்ளும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தேமுதிகாவுக்கு … Continue reading தேமுதிகவின் இன்றைய நிலை

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

08/03/2020 இன்று பெண்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் அவர்களின் முழு திறன்களையும் (உழைப்பையும்) கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் இல்லாத துறைகளை காண்பாது மிக அரிது, இதற்கு மிக முக்கிய காரணம் பெண்களின் கல்வியறிவு, கடின உழைப்பு மற்றும் அவர்களின் தனி ஆளுமை திறமை. அவர்களுக்கு இருக்கும் பல தடைகளை அவர்களே உடைத்தெறிந்து அவர்களுக்கான இடங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. பெண்களுக்கு இயற்கையாகவே ஆளுமைத்திறன் அதிகம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருந்து இருக்காது. பல தலைமுறையாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதின் … Continue reading பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

குழந்தைகளின் எதிர்காலம் …

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பொதுத்தேர்வு சிறந்த வழி என்று 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது நமது அரசுகள். குழந்தைகளுக்கு அதுவும் 10 வயது குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் என்று நமக்குள் மிகபெரிய கேள்வியையும் மிகவும் மன வேதனையையும் ஏற்படுத்துகிறது. இந்த பொதுத்தேர்வு என்ற கொள்கை முடிவினால் ஏற்படும் பின்விளைவுகளை இந்த அரசுகள் உணரவில்லை என்பது தெளிவாகிறது. எப்படி எதிர்கொள்வது தன்னுடைய பத்தாவது வயதில், 5ஆம் வகுப்பு பொதுத் தேர்வினால் ஏற்படும் தோல்வியை குழந்தைகள் எப்படி எதிர்கொள்ளும். தன்னுடன் படித்த சக மாணவர்கள் … Continue reading குழந்தைகளின் எதிர்காலம் …

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு

#AyodhyaVerdict நேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் இருந்து வெளியேறவேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் ஆசை. இந்த தீர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஒருவித நிம்மதியை கொடுத்து உள்ளது என்பதுதான் உண்மை, நிம்மதி மட்டுமில்லாமல் குற்ற உணர்விலிருந்து விடுபட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தீர்ப்பின் படி இந்துக் கோயில் ஒன்றை இடித்து அதன் மீதுதான் பாபர் மசூதி … Continue reading பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறு மரணங்கள் தொடர்கதையாக இருக்கிறது, இதற்கு முன் நடந்த மரணங்களில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் அனைவருக்கும் இருக்கும் இப்போதைய மிகப்பெரிய கேள்வி. அதுமட்டுமில்லாமல், குழந்தை கிணற்றில் தன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில், மேலே நாம் குழந்தையை எப்படி மீட்பது என்று தெரியாமல் பல மீட்பு … Continue reading ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு