ரஜினியின் அரசியல் விளையாட்டு

கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.  அந்த பேச்சில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் தன் கருத்தை பதிவுசெய்தார்.  தூத்துக்குடி போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களை பார்ப்பதற்காக தூத்துக்குடி சென்று பார்த்து விட்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது எதற்கெடுத்தாலும் … Continue reading ரஜினியின் அரசியல் விளையாட்டு

தமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு?

கலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு ஜெயலலிதாவிடமிருந்து மிகவும் கடுமையான சொற்களுடன் மறுப்பு அறிக்கை வரும். அதனைப் போன்று ஜெயலலிதாவிடம் இருந்து வரும் அறிக்கைக்குக் கலைஞரிடம் இருந்து எதுகை மோனையுடன் மறுப்பு அறிக்கை என்று மாறி மாறி அறிக்கை போர் நடைபெறும். தமிழ்நாட்டு தினசரி நாளிதழிகளில் யார் தலைப்பு செய்திகளில் வருவது என்று இருவரும் போட்டி … Continue reading தமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு?