ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது கட்சி தொடங்குவது உறுதி என்றும், எப்போழுது கட்சியை தொடங்கப்படும் என்று சொல்வதற்கு தேதி குறித்திருக்கிறார் ரஜினிகாந்த். பல தயக்கங்களை கடந்து இப்போழுது அரசியலுக்கு வரும் அறிக்கையை கொடுத்துள்ளார். அனேகமாக அனைவரும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முடிவுக்கு வந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில், நடிகர் ரஜினியின் அரசியல் பேச்சுக்கள், தன்னுடைய படங்களி்ன் வியாபாரத்திற்கு பயன்பட்டது, ஆனால் அரசியல்வாதி ரஜினியின் நடவடிக்கைகள் இனி எப்படி, யாருக்கு பயன்படும் என்பதை ஜனவரி … Continue reading ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

ரஜினியின் அரசியல் விளையாட்டு

கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.  அந்த பேச்சில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் தன் கருத்தை பதிவுசெய்தார்.  தூத்துக்குடி போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களை பார்ப்பதற்காக தூத்துக்குடி சென்று பார்த்து விட்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது எதற்கெடுத்தாலும் … Continue reading ரஜினியின் அரசியல் விளையாட்டு