நடிகர் ரஜினிகாந்த – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

நடிகர் ரஜினிகாந்த நேற்றிரவு காவேரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “சிகிச்சை முடிந்தது. நான் நலமாக உள்ளேன். இரவு தான் நான் வீடு திரும்பினேன். எனது உடல்நலனுக்குப் பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது நலன் குறித்து விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார். Continue reading நடிகர் ரஜினிகாந்த – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

பெயர் மாற்றம் – Facebook to Meta

மெட்டாவேர்ஸை வெரஜுவல் என்வயர்மெண்ட் என்று அழைத்தார் மார்க் ஜுக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க். இனி Facebook, WhatApp, Instagram, Messenger ஆகியவை மெட்டா என்கின்ற நிறுவனத்தின் கீழ் வருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் (virtual environment headsets), ஆக்மென்ட் ரியாலிட்டி கண்ணாடிகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் திரையைப் பார்ப்பதன் மூலம் வேறு உலகத்திற்குச் செல்லலாம், கேம்களை விளையாடலாம், ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். Metaverse வில், நீங்கள் வழக்கமாக செய்யும் அனைத்தையும் நீங்கள் செய்ய முடியும். Metaverse … Continue reading பெயர் மாற்றம் – Facebook to Meta

அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு

இன்றைய காலகட்டங்களில் இளவயது மாரடைப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்பது மிகுந்த கவலையை கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பினால் மறைந்தார் என்கின்ற அதிர்ச்சி செய்தி நம்மை மேலும் கவலையடைய செய்கிறது. அவரின் மறைவு, கன்னட திரையுலகை மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பல தலைவர்கள் தங்களின் இரங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். புனித் அவர்களின் இரு கண்களைத் தானமாக கொடுத்துள்ளார். புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம். Continue reading அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு

வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

21-10-2021 அரசியலில் வாரிசுக்கு என்ன வேலை என்று தன்னுடைய கடும் எதிர்ப்பை திமுகவின் அன்றைய தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் காட்டிவிட்டு, மதிமுக என்கின்ற கட்சியை உருவாக்கினார் வைகோ. ஆனால் இன்று மதிமுகாவும் வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் வாரிசுக்கு கட்சியில் பதவி தருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதனை வைகோ அவர்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார். தன் மகன் துரை அவர்களுக்கு மதிமுகவின் முக்கியப் பதவியான தலைமைக் கழகசெயலாளர் என்கின்ற பதவியை கொடுத்ததின் மூலமாக தானும் வாரிசு அரசியலுக்கு எதிரி இல்லை என்று இந்த உலகுக்கு … Continue reading வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

மின்சார வாகனம் – நன்மைகள் மற்றும் தீமைகள்

கடந்த பல வருடங்களாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டனர். இன்று அனைத்து முன்னனி நிறுவனங்களும் வெற்றிகரமாக மின்சார வாகனங்களை உருவாக்கி தங்களின் முதல் தலைமுறை மின்சார வாகனத்தை வர்த்தகத்துக்கு வந்துள்ளது. மின்சார வாகனம் வாங்குவதில் அனைவருக்கும் ஆர்வம் இருந்தாலும் காரின் விலை அதிகமாக இருப்பதினால், நடுத்தர வர்க்கத்துக்கு மின்சார வாகனம் எட்டாக்கனியாக இருக்கிறது. வரும் காலங்களில் மின்சார வாகனத்தின் விலை குறைந்து அனைவருக்குமானதாக மாறும் காலம் மிக அருகில் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துதில்லை. மின்சார வாகனத்தில் … Continue reading மின்சார வாகனம் – நன்மைகள் மற்றும் தீமைகள்

மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!

காட்டில் இருக்கும் புலியை (T-23) சுட்டு பிடிக்க (வேட்டையாட) உத்தரவு நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் குரங்குகள் அதிகமாக இருந்தால் அதனை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, அவைகளை பிடித்து அருகேயுள்ள காட்டில் விடுகிறோம். ஏன் என்றால்? நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் காட்டில் வசிக்க வேண்டிய விலங்குகளுக்கு என்ன வேலை என்பதினால். இதனையே காட்டில் வசிக்கும் விலங்குகள் நம்மிடம் கேட்டால், நம்மிடம் பதில் இல்லை. விலங்குகள் மற்றும் பூர்வகுடிகள் வசிக்கும் இடம் காடு. (காடுகளிலும், அங்கிருக்கும் விலங்குடனனும் எப்படி வாழ்வது என்பது பூர்வகுடிகளுக்கு தெரியும்). காடுகளில் மக்களாகிய நமக்கு என்ன … Continue reading மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!

CSKவின் சூப்பர் ஸ்டார் – ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad)

2021 ஆம் ஆண்டு துபாயில் நடக்கும் IPL விளையாட்டில் CSKவின் சூப்பர் ஸ்டாராக மின்னுகிறார் ருதுராஜ் (Ruturaj Gaikwad). இந்த தொடரில் தான் விளையாடிய அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும், இன்று (2-10-2021) தன்னுடைய முதல் சதத்தை (101*) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் CSK 189 ரன் RRக்கு எதிராக எடுப்பதிற்க்கு முக்கிய காரணமாக இருந்தார். இன்று, CSKவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ருதுராஜ் அவர்கள், இதனைப் போன்று, ரன் வேட்டையை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் (INDIA team) சூப்பர் ஸ்டாராக வருவதற்கு தி தமிழன் … Continue reading CSKவின் சூப்பர் ஸ்டார் – ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad)

மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம்

02-அக்டோபர்-2021 இங்கிலாந்து சாம்ராஜ்யத்திலிருந்து, இந்திய சுதந்திரம் பெற பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவர் மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்த மகாத்மா காந்தி அவர்களை தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் மகாத்மா காந்தியடிகள் அவர்கள் பிறந்தார். மாகத்மா காந்தி என்று சொன்னவுடன், நமக்கு நினைவில் வருவது சத்தியாகிரகம் என்று அறியப்பட்ட அறவழிப் போராட்டம் தான். இப்போராட்டம் இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது. இந்திய தேசிய … Continue reading மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம்

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த 10 அறிவிப்புகள்

செப்டம்பர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்அறிவித்தவைகளில் மிகவும் முக்கியமானவைகள் தந்தை பெரியாரின் பிறந்தநாள் – சமூகநீதி நாள் தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும். சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்! பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் களங்கண்ட துறைகளிலெல்லாம் வெற்றி!சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி!நவீன தமிழ்நாட்டின் சிற்பி!அரைநூற்றாண்டுகாலத் தலைப்புச்செய்தி!என்றும் அண்ணாவின் அன்புத்தம்பி!வரலாறாக வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞருக்கு … Continue reading வரலாற்றுச் சிறப்புவாய்ந்த 10 அறிவிப்புகள்

ஜனநாயக கடமையாற்றுவோம்…

இன்று (06.04.2021), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நாள். ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான கடமைகளில், முதன்மையானது தன்னுடைய வாக்குகளை தவறாமல் செலுத்துவது ஆகும். மக்களாகிய நாம் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுக்கும் நாள் அனைவரும், தங்களுடைய வாக்குகளை சிந்தித்து நமக்கும், நம்முடைய சுற்றார்களுக்கும் நன்மைகளை செய்யக்கூடிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வாக்கு செலுத்துவோம். பொது மக்களாகிய நமக்கு பயன் தரும் அதிகார வர்க்கத்தை தேர்தெடுப்போம். தாஜூதீன் Continue reading ஜனநாயக கடமையாற்றுவோம்…