தேசிய திரைப்பட விருது – அசுர நடிகனுக்கு தேசிய விருது

2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருது கிடைத்துள்ளது. அசுரன் திரைப்படத்திற்கும், அதில் நடித்த தனுஷூக்கும் இந்தியவின் உயர்ந்த விருதான “தேசிய திரைப்பட விருது” கிடைத்துள்ளது. இது, சிறந்த நடிகராக தனுஷ் பெரும் இரண்டாவது தேசிய விருதாகும். தமிழ் நடிகர்களில், கமல்ஹசான் அவர்கள் மூன்று (மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன்) தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தனுஷ் அவர்கள் இரண்டாவது முறையாக இந்த விருதினை பெறுகிறார். 2010ஆம் ஆண்டு ஆடுகளம் படத்திற்கும், இப்பொழுது (2019) அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் நடிகர் என்கின்ற … Continue reading தேசிய திரைப்பட விருது – அசுர நடிகனுக்கு தேசிய விருது

டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

21/03/2021 புதுச்சேரி அரசியலில் கட்சியைவிட வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. கட்சி அவர்களி்ன் வெற்றியை மேலும் உறுதி செய்யும் அவ்வளவுதான் கட்சியின் வேலை. இதுதான் தமிழ்நாட்டு அரசியலுக்கும், புதுச்சேரி அரசியலுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். குறிப்பிட்ட தொகுதி வேண்டும் என்பதற்காக, அந்த தொகுதியில் இருக்கும் எம்.எல்.ஏகள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்வார்கள், இருந்தும் அந்த வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏவாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் … Continue reading டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

தென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்

ஒரு வருடத்திற்கு பிறகு, கடந்த வாரம் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இரண்டு நாள் பயணமாக சென்று வந்தோம். தென்னிந்தியாவின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் என்றும் அனைவருக்கும் பிடித்த மலைப்பிரதேசம். எத்தனை தடவை போனாலும், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய இடத்துக்கு வந்த அனுபவம் தான் ஏற்படும். உன்னுடைய கார் பாண்டிச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு தானாக சென்றுவிடும் என்று விளையாட்டாக நண்பர்கள் சொல்வார்கள், அந்த அளவுக்கு கொடைக்கானல் என் மனதுக்கு பிடித்த இடங்களில் முதன்மையானது. வெள்ளிக்கிழமை (18/12/2020), இரவு 8 30 மணியளவில் நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டோம். அம்மா, இரவு சாப்பாடாக … Continue reading தென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்

கொரோனாவினால் ஏற்பட்ட நன்மைகள்

2020ஆம் ஆண்டு அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. அப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் வாட்டி வதைத்தது என்று சொல்லலாம். பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிய காலகட்டம். இப்படி பல துன்பங்கள் இருந்தாலும், ஒரு சில (விரல் விட்டு என்னும் அளவுக்கு) நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. என் பார்வையில், முக்கிய நன்மைகள். இயற்கை மருந்தை ஊக்குவித்தது (வீட்டில் இருக்கும் பொருட்களை மருந்தாக மாற்றியது) இந்த நவீன காலகட்டத்தில் நம் முன்னோர்களின் வழிமுறைகளை பலவற்றை மறந்து இருக்கிறோம் அவற்றில் முதன்மையான ஒன்று … Continue reading கொரோனாவினால் ஏற்பட்ட நன்மைகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2021

2020 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் கடினமான ஆண்டாக இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இன்று பிறந்துள்ள 2021 ஆம் ஆண்டு, அனைவருக்கும் நல் வருடமாக அமைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறாம். தாஜூதீன் Continue reading இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2021

ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது கட்சி தொடங்குவது உறுதி என்றும், எப்போழுது கட்சியை தொடங்கப்படும் என்று சொல்வதற்கு தேதி குறித்திருக்கிறார் ரஜினிகாந்த். பல தயக்கங்களை கடந்து இப்போழுது அரசியலுக்கு வரும் அறிக்கையை கொடுத்துள்ளார். அனேகமாக அனைவரும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முடிவுக்கு வந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில், நடிகர் ரஜினியின் அரசியல் பேச்சுக்கள், தன்னுடைய படங்களி்ன் வியாபாரத்திற்கு பயன்பட்டது, ஆனால் அரசியல்வாதி ரஜினியின் நடவடிக்கைகள் இனி எப்படி, யாருக்கு பயன்படும் என்பதை ஜனவரி … Continue reading ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

தோனி – போராடும் தலைவன்

கிரிக்கெட்டில் தோனி என்றாலே வெற்றி, அதுவும் கடைசி ஓவரில் வெற்றியாக மாற்றும் திறமையே அனைவருக்கும் பரிச்சயமானது. துபாயில் நடத்துக் கொண்டிருக்கும் IPL-2020யில், Chennai Super Kings (CSK) முதல் வெற்றிக்குப் பிறகு, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே அடைந்துள்ளது. இந்த தோல்விகளினால், பலரது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் தோனி. குறிப்பாக, எப்போதும் தோனியின் தோல்வியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் சேவாக் போன்றவர்கள், தோனியின் இந்த தோல்வியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கடுமையான விமர்சனங்களை தோனியின் மீது கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்று நடக்கும், போட்டியில் CSKவுக்கு ஒரு … Continue reading தோனி – போராடும் தலைவன்

சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) – தங்க சேமிப்புப் பத்திர முதலீடு திட்டம்

மத்திய அரசின் 6-ம் கட்ட தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு வரும் திங்கள் (31-08-2020) முதல் தொடங்கி வெள்ளியென்று (04-09-2020) முடிகிறது. தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5,117 என மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. மின்னனு மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கிராம் ஒன்றிற்கு ரூ. 50 தள்ளுபடி செய்து ரூ. 5,067 என்ற விலைககு ஒரு கிராம் சேமிப்புப்பத்திரம் கிடைக்கும். இந்த திட்டம், திங்கள் (31-08-2020) தொடங்கி வெள்ளியன்று (04-09-2020) முடிவடைகிறது. ஆகையினால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யவிரும்புவர் இந்த நாட்களுக்குள் முதலீடு செய்யலாம். முக்கிய அம்சங்கள் இந்த … Continue reading சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) – தங்க சேமிப்புப் பத்திர முதலீடு திட்டம்

தலைமை பண்புகளுக்கு எடுத்துக்காட்டு – ஆசிரியர் குணசேகரன்

நேர்பட பேசு, காலத்தின் குரல் என்கின்ற விவாத மேடைகளை தன்னுடைய தனித் திறமையினால் தொலைக்காட்சி விவாத மேடைக்கு என்று ஒரு தரத்தை கொடுத்தவர் குணா என்கின்ற குணசேகரன் அவர்கள். அவருடைய நேர்படப்பேச்சும் மற்றும் காலத்திற்கான சமூக அக்கறை இந்த இரண்டும் தான் பொது மக்களாகிய நமக்கு அவருடான நெருக்கத்தை அதிகமாக்கியது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் அவரை சார்ந்தவர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் அனைவரும், அவருடைய தலைமைப் பண்புகளை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மேற்பார்வையில் வளர்ந்த நிறுவனம் அவரை வெளியேற்றியதா அல்லது அவரே வெளியேறினாரா என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். … Continue reading தலைமை பண்புகளுக்கு எடுத்துக்காட்டு – ஆசிரியர் குணசேகரன்

நாவல் மரம்

எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாவல் மரம். பசுமையான தோற்றத்தில் இருந்த மரம். இன்று அதன் கிளைகளை இழந்து காட்சி தருகிறது. காலை எழுந்தவுடன், இந்த மரத்தில் இருந்த நாவல் பழங்களை ரசித்து உண்ணும் அணில்களை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இன்று அந்த காட்சிகளை பார்க்க முடியவில்லை. இனி அந்த காட்சியை பார்க்க சில வருடங்கள் ஆகும். தாஜூதீன் Continue reading நாவல் மரம்