
மதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இனியும், அரசு மதுவை ஒழிக்கும் என்று நம்பினோம் என்றால் நம்மைப் போன்ற ஒரு மூடர்கள் எவரும் இல்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன், மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது, அதனை சார்ந்து அனைத்து கட்சிகளும் மதுவை ஒழிக்காமல் ஓய மாட்டோம் என்று தன் குரலை ஓங்கி ஒலித்தன. அனைத்து ஊடகங்களிலும் இதற்கான சூடான விவாதங்கள் நடைபெற்றது. ஆனால் இன்று அப்படியான எந்த மக்கள் போராட்டங்களும் நடைபெறவில்லை, மக்கள் மறந்தார்கள் என்பதினால், கட்சிகளும் அதற்கான தொடர் போராட்டங்கள் நடத்தவில்லை. மக்கள் மற்றும் கட்சிகள் மறந்தார்கள் என்பதினால் ஊடகங்களும் இதற்கான விவாதங்களை நடத்தவில்லை.
சில கட்சிகள், நாங்கள்தான் மது இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபடுகிறோம் மற்றும் பாடுபடுவோம் என்றும், நாங்கள்தான் மதுவை ஒழிக்க வந்த கட்சிகளின் முதன்மையானவர்கள் என்று மார்தட்டிக் கொண்டவர்களும் இன்று அதற்கான பேச்சே இல்லாமல் இருக்கிறார்கள்.
மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதற்கான சான்று, வருடம் வருடம் டாஸ்மாக்கின் விற்பனை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே இருப்பதுதான். மதுவினால் பல ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மது மக்களை மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளது.
- மது அருந்தாதவர்கள்
- எப்பொழுதாவது மது அருந்துபவர்கள்
- மதுவுக்கு அடிமையாக இருப்பவர்கள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்களில், மதுவுக்கு அடிமைகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை மிவுகம் குறைவாக இருக்கும், அதுவும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் இருப்பார்கள். அவர்களுக்காக அந்த ஊரே பரிதாபப்படும். இதனை போன்று, எப்பொழுதாவது மது அருந்துபவர்கள் யாருக்கும் தெரியாமல் ஏன் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மது அருந்துவார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருக்கும். மதுவை அருந்தாதவர்கள் நிறைந்து இருப்பார்கள்.

ஆனால் இன்று அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. மது அருந்தாதவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். மதுவுக்கு அடிமைகளாக பல பேர் இருக்கிறார்கள். மதுவை எப்பொழுதாவது குடிப்பவர்கள் அதனை பெருமையாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அவர்களின வீட்டில் இருப்பவர்களே கூட என் கணவன் / என் மனைவி / என் மகன் / என் மகள் / என் அப்பா / என் அம்மா எப்பொழுதாவது தான் மது அருந்துவார்கள் என்று பெருமையாக சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. மது அருந்துவது ஒரு கவுரவமாக பார்க்கும் சமுதாயமாக மாறி விட்டடோம்.
மதுவினால் ஏற்படும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தெரிந்தும், நாம் அதனை புறந்தள்ளி கொண்டு பயணிக்கின்றோம். மதுவினால் இன்றைய குடும்பங்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடும்பங்களின் பொருளாதாரமும் சீரழிந்து கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக தான் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளையும் சொல்லவைத்தது. ஆனால் படிப்படியாக மதுவை ஒழிப்பார்கள் என்று பார்த்தால் நம்மை படிப்படியாக மது ஒழிப்பில் இருந்து மறக்கடித்து விட்டார்கள்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் மறுபடியும் மது மையப்புள்ளியாக மாறும் அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சொல்வார்கள். நாமும் மது இல்லாத தமிழகம் வரும் என்று நம்பி மூடர்களாக இருப்போம்.
If they close all bar means, what is the alternative way to earn money?
No water
No agriculture
No plastic
No industry
Money?
LikeLike
Strong point has been discussed.
I am proud of myself because I am a detotler
By
VJ Arun
LikeLike