கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது கட்சி தொடங்குவது உறுதி என்றும், எப்போழுது கட்சியை தொடங்கப்படும் என்று சொல்வதற்கு தேதி குறித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
பல தயக்கங்களை கடந்து இப்போழுது அரசியலுக்கு வரும் அறிக்கையை கொடுத்துள்ளார். அனேகமாக அனைவரும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முடிவுக்கு வந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில், நடிகர் ரஜினியின் அரசியல் பேச்சுக்கள், தன்னுடைய படங்களி்ன் வியாபாரத்திற்கு பயன்பட்டது, ஆனால் அரசியல்வாதி ரஜினியின் நடவடிக்கைகள் இனி எப்படி, யாருக்கு பயன்படும் என்பதை ஜனவரி முதல் பார்க்களாம்.
நடிகர்கள் அரசியலுக்கு வரும் போழுது எப்போழுதும் எம்ஜிஆரை உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். திரைப்படங்களில், நடிப்பில் எம்ஜிஆர் – சிவாஜி போன்று ரஜினி – கமல் என்று சொல்லிக்கொண்டார்கள். இதனைப் போன்று அரசியலிலும் எம்ஜிஆர் போன்று வருவோம் என்று நினைத்துக்கொண்டு, அரசியலுக்கு வருவது, அறிவார்ந்த செயல் இல்லை என்று சொல்லாம்.
எம்ஜிஆர் நடிகனாக இருந்து முதலமைச்சர் ஆனார் என்பது உண்மை. ஆனால், இப்போழுது முதலமைச்சராக துடிக்கும் நடிகர்கள் நினைப்பதை போன்று எம்ஜிஆர் அவர்கள் நடிகனாக இருந்து, ஒரிரவில் நேரடியாக முதலமைச்சராக வில்லை என்ற உண்மையை நினைக்க மறுக்கிறார்கள்.
எம்ஜிஆர் அவர்கள், பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களின் திராவிடக் கொள்கையை தன் திரைப்படங்களின் மூலம் அனைத்து கிராமங்களுக்கு கொள்கை பரப்பு செயலாளரை போன்று கொண்டு சென்றார். அது மட்டுமின்றி, அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலைமைச்சரா வருவதற்கு பாடுபட்டவர்களில் ஒருவராக இருந்தவர் எம்ஜிஆர் அவர்கள். அதன் பிறகு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் கருத்து வேறுபாடு பட்டு தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்து முதல்மைச்சர் ஆனார் என்பது தனி வரலாறு. எம்ஜிஆருக்கு என்று ஒரு கொள்கை இருந்தது, ஒரு கட்சியின் தொண்டனாக இருந்து உழைத்து ஆட்சிக்கு வந்தார் முதலமைச்சர ஆனார். இதற்கு சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார் அவ்வளவுதான்.
ரஜினி அவர்களின் அரசியல் கொள்கை என்ன, எதற்காக அரசியலுக்கு வருகிறார், அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், இதுவரை மக்களுக்கு என்று என்ன செய்துருக்கிறார் என்கின்ற பல கேள்விகள் எழாமலில்லை. கடந்த பத்து வருடங்களாக ஏதாவது ஒரு நலத் திட்டங்கள் மக்களுக்கு என்று செய்திருக்கிறாரா, நலத் திட்டம் வேண்டாம், மக்களுக்கா எதாவது ஒரு கோரிக்கையை அரசிடம் போராடி மக்களுக்கு வாங்கி கொடுத்துள்ளாரா. இப்படி எதுவுமே செய்யாமல் இன்று அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். அரசியலுக்கு வருவது என்பது ஒன்றும் தவறில்லை, ஆனால், நான் எம்ஜிஆரை போன்று அரசியலுக்கு வருகிறேன் என்பது தான் வேடிக்கை.
மக்களுக்கு என்று எந்த ஒரு உழைப்பும் இல்லாமல், நடிகன் என்ற அடையாளத்துடன் அரசியலுக்கு வருவது என்பது, எம்ஜிஆர் பாதையில்லை, மாறாக சிவாஜி அவர்களின் பாதை. இன்று ரஜினியும் கமலும் தேர்ந்தெடுத்துள்ள பாதை சிவாஜி பாதை.
ரஜினியின் அரசியல் நாடகம்! தொடரும்
தாஜூதீன்
Yes, he didnt did anything, but now all know about current situation of DMK and ADMK doing. So some change required, pls give an opportunity,definitely he will do the best than others.
LikeLike