03-நவம்பர்-2021

பூஞ்சேரி கிராமத்தில் வாழும் இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கு பட்டா, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவர்களின் வாழ்வியலுக்கு தேவையான அதிமுக்கியமான உரிமைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸடாலின் அவர்கள் இன்று வழங்கினார். இவர்களின் இன வாழ்வில் ஒளியேற்றும் நாளாக ஆக்கினார்.
தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை அனைவருக்குமாக செம்மனே செய்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் ஒளியை கொடுப்பார் என்கின்ற நம்பிக்கையை தன்னுடைய செயல்களின் மூலம் நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒடுக்கப்பட்டவர்களிள் குரலாக நான் இருக்கிறேன் என்று அவர்களின் வீடுகளுக்குச் சென்று நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

சகோதரி அஸ்வினி அவர்களுக்கு
மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை.
அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.
மு.க.ஸடாலின்